செய்திகள் :

”வேலியே பயிரை மேய்ந்ததா..?”- திருட்டு நகை பறிமுதல் விவகாரத்தில் 4 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றம்!

post image

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கண்காணித்து, குற்றவாளிகளை விரைவாக கைது செய்வதற்காக, திருவோணம் போலீஸ் எஸ்.ஐ குமரவேல் தலைமையில் ஏட்டு தர்மலிங்கம், போலீஸார் ஜெகன், சின்னத்துரை ஆகிய நான்கு பேர் கொண்ட தனிப்படையை தஞ்சாவூர் எஸ்.பி சுந்தரவதனம் அமைத்திருந்தார்.

Police department

இந்நிலையில், ஒரத்தநாடு மேலஉளூர் பகுதியில் சமீபத்தில் நடந்த திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த எஸ்.ஐ குமரவேல் டீம், நகையை திருடிய குற்றவாளியால் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்டு, அவற்றை உரியவரிடம் ஒப்படைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர், எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதை விசாரித்த எஸ்.பி சுந்தரவதனம், குமரவேல் தலைமையிலான தனிப்படையை கலைத்து உத்தரவிட்டார்.

மேலும், விசாரணையில், பல்வேறு வழக்குகளை குமரவேல் தலைமையிலான தனிப்படை முறையாக விசாரிக்காமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, எஸ்.பி சுந்தரவதனம், எஸ்.ஐ., குமரவேல், ஏட்டு தர்மலிங்கம், போலீஸார் ஜெகன், சின்னத்துரை ஆகிய நான்கு பேரையும் தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றி நடவடிக்கை மேற்கொண்டார். இந்த சம்பவம் தஞ்சாவூர் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரத்தநாடு

இதுகுறித்து விபரம் அறிந்த சிலரிடம் பேசினோம், ``ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூரில் உள்ள ஒரு வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மொத்தம் 20 பவுன் கொள்ளை போனதாக சொல்கிறார்கள். இதனை குரமவேல் தலைமையிலான தனிப்படை விசாரித்த நிலையில் நகையை திருடிய நபரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 20 பவுன் நகையை பறிமுதல் செய்ததாக சொல்கிறார்கள். இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆரில் 4 பவுன் மட்டுமே காணாமல் போனதாக பதியப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இந்நிலையில், குமரவேல் டீம், 4 பவுன் மட்டுமே நீதிமன்றத்தின் மூலம் உரியவரிடம் ஒப்பதைத்தாக சொல்கிறார்கள். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து எஸ்.பி சுந்தரவதனத்திடம் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர். ஆனால் குமரவேல் தரப்பு, இதில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தவறான தகவலை கிளப்பி விடுவதாகவும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Flydubai: 'கத்தியால் அல்ல' - இந்திய விமானி எப்படித் தாக்கப்பட்டார்? UAE சொல்வது என்ன?

ஃபிளைதுபாய் சம்பவத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமனைச் சேர்ந்த விமானியான ஹமாம் அல்ஹமாமி கத்தியால் குத்தினார் என்று முன்பு கூறப்பட்டது. விமானத்திற்குள் அதுவும் காக்பிட்டிற்குள் எப்படிக் கத்தி அனும... மேலும் பார்க்க

கடனை அடைக்க நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் நாடகம்! - தந்தையிடம் ரூ.90 லட்சம் பறிக்க முயன்ற மகன்

பெங்களூருவை சேர்ந்தவர் மணீஷ். சில நிதி பரிவர்த்தனைகளுக்காக கடக் செல்வதாக கூறி விட்டு மணீஷ் பெங்களூரில் உள்ள தனது வீட்டை விட்டு இரவு 11.40 மணிக்கு வெளியேறினார். மேலும் காலையில் மீண்டும் அழைப்பதாக தனது ... மேலும் பார்க்க

நாத்தனார்களின் திருமணம் மீறிய தொடர்பு; கர்ப்பிணி கொடூரக் கொலை - மாமியார் உட்பட சிக்கிய 6 பேர்

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (35). நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டுவரும் இவருக்கு, 21 வயதான சந்தியா என்பவருடன் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்து மு... மேலும் பார்க்க

உ.பி: பெண்ணாக மாற அறுவை சிகிசைக்கு விரும்பிய மகன் - எதிர்த்த தாயை அடித்து கொன்ற மகன்! | அதிர்ச்சி

பிறப்பால் சிலருக்கு ஹான்மோன் சிக்கல்கள் இருப்பது வழக்கம். அது போன்ற ஹார்மோன் சிக்கல் இருப்பவர்கள் ஆணாக இருப்பவர்களுக்கு பெண்களுக்கான குணமும், பெண்ணாக இருப்பவர்களுக்கு ஆண்களுக்கான குணமும், நடவடிக்கைகளு... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் ஹோட்டலுக்கு சென்ற மருத்துவ கல்லூரி மாணவி - பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி

தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் கோமதி ஸ்ரீஜனா என்ற பெண் குழந்தைகள் மருத்துவத்தில் முதுகலைப் படிப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீஜனாவைத் தொடர்பு... மேலும் பார்க்க

சென்னை: பிரபல ரௌடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்; காட்டுப்பகுதியில் என்ன நடந்தது?

சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் முகமது சதாம் (29). ஏ பிளஸ் ரௌடியான இவர் மீது 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஞ்சா விற்பனையிலும் இவர் ஈடுபட்டு வந்... மேலும் பார்க்க