செய்திகள் :

வேலூர்: பைக் விபத்தில் மூளைச்சாவு; 18 வயது கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் தானம்!

post image

வேலூர், சேண்பாக்கம் செல்லியம்மன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். காஸ் ஏஜென்சியில் ஓட்டுநராக வேலைச் செய்து வருகிறார். இவரது மனைவி பவானி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். இரண்டாவது மகன் ரித்தீஷ். வயது 18. பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில், வாலாஜாபேட்டை அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார் மாணவன் ரித்தீஷ். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரித்தீஷின் உடல்நிலை கடலைக்கிடமானதையடுத்து, மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மாணவன் ரித்தீஷ்

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், நேற்றைய தினம் ரித்தீஷுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரின் உடல் உறுப்புகளை பிறருக்குத் தானமாக வழங்க அவரின் குடும்பத்தினர் முன்வந்தனர்.

இதையடுத்து, மாணவனின் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் இடது சிறுநீரகம் ஆகியவை சி.எம்.சி மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் ரேலா மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கும், கண்கள் சி.எம்.சி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாணவன் ரித்தீஷின் உடல் உரிய மரியாதையுடன் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

`4 பேருக்கு நல்லதுதானே செய்யுறான், செய்யட்டும்' மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தின் சமூகசேவை; நெகிழும் தாய்

திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் வளைவு, மாலை நேரங்களில் மிகவும் பரபரப்பாகிவிடும். எந்நேரமும் வாகனங்கள் முட்டிக்கொண்டு, ஹாரன் சத்தங்கள் காதைக் கிழிக்கும். அங்கே, செய்கைகளாலேயே ஒட்டுமொத்த டிராஃபிக்... மேலும் பார்க்க

`தினம் 300 ரூபாய் சேர்ந்தா போதும்; நானும், மனைவியும் சந்தோஷமா இருப்போம்!' - 2 ரூபா `வடை' தாத்தா

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்டேட் ஃபாங்கு செல்லும் வழியில் பாம்ஸ் ஹோட்டல் எதிர்ப்புறம் துரை(77) என்ற முதியவர் ஒருவர் பல ஆண்டு காலமாக வடை விற்பனை செய்து வருகிறார்.மயிலாடுதுறை மக்கள் இவ... மேலும் பார்க்க

கோவை: விழிச்சவால் மாற்றுத்திறனாளிகளான மனைவி, குழந்தைகள்; பரிதவிக்கும் கூலித் தொழிலாளர் |Photo Album

மாரிமுத்து குடும்பத்தினர்.மாரிமுத்து குடும்பத்தினர்.மாரிமுத்து குடும்பத்தினர்.மாரிமுத்து குடும்பத்தினர்.மாரிமுத்து குடும்பத்தினர்.மாரிமுத்து குடும்பத்தினர்.மாரிமுத்து குடும்பத்தினர்.மாரிமுத்து குடும்ப... மேலும் பார்க்க

'தேனி மண்ணின் பெருமை' கீர்த்தி சக்கரா விருது பெற்ற வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உற்சாக வரவேற்பு

கீர்த்தி சக்கரா விருது பெற்ற ராணுவ வீரர்கீர்த்தி சக்கரா விருது பெற்ற ராணுவ வீரர்கீர்த்தி சக்கரா விருது பெற்ற ராணுவ வீரர்கீர்த்தி சக்கரா விருது பெற்ற ராணுவ வீரர்கீர்த்தி சக்கரா விருது பெற்ற ராணுவ வீரர்... மேலும் பார்க்க

`தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடாதீர்கள்' - அனுபம் கெர் பகிர்ந்த விமான சம்பவம்!

முன்பின் பழக்கமில்லாத ஒருவரை பார்க்கும்போது அவரது தோற்றத்தை வைத்தே அவரைப் பற்றி நம்மில் பலர் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். அவர் இப்படித்தான், அவருடைய குணம் இதுதான் என நாமாகவே ஒரு கதையை உருவ... மேலும் பார்க்க

காலையில் தூய்மைப் பணியாளர், மாலையில் ஆட்டோ ஓட்டுநர்: பிள்ளைகளுக்காகப் போராடும் இந்திராணி!

வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் அருகே உள்ள ஒரு தெருவில் வசித்து வருகிறார், இந்திராணி. வாழ்வாதாரத்துக்கான தீர்க்கமான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அவருடன் சில நிமிடங்கள் பேசினாலே, வாழ்க்கையை... மேலும் பார்க்க