செய்திகள் :

ஸ்டார்பக்ஸ் GCC மையம்: `800 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்பு' - தமிழக முதல்வர் ஒப்பந்தம்

post image

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி (STARBUCKS COFFEE) நிறுவனம், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre - GCC) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தால் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre - GCC) அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில், உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre - GCC) நிறுவ முன்வந்துள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில் முதல்முறையாக, தமிழ்நாட்டில் தனது உலகளாவிய திறன் மையத்தை நிறுவ முன்வந்துள்ளது.

இந்தியாவில் தனது சில்லறை வணிக கூட்டு நிறுவனமான Tata Consumer Products நிறுவனத்திடமிருந்து இந்நிறுவனம் தனித்து இயங்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், GCC துறையில் உயர் ஊதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு மேலும் ஊக்கமளிப்பதுடன், தமிழ்நாட்டின் GCC வளர்ச்சிப் பயணத்தில் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் இணைவது, மாநிலம் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சேவை மையமாக உருவெடுத்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது, ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் திரு. ஆனந்த் வரதராஜன் அவர்கள், இந்தியாவை நாங்கள் மிகவும் முக்கியமான நாடாகக் கருதுவதாகவும், சென்னையில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏராளமாக உள்ள நிலையில், இவ்வல்லுநர்கள் பணியில் சேரும் நிறுவனங்களில் நீண்ட காலம் பணியில் தொடர்வதும் (Less Attrition), தமிழ்நாட்டிலுள்ள சிறந்த உட்கட்டமைப்பும், தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கமும், புதிய தீர்வுகளைக் காணவும், வணிகத்தை வளர்க்கவும் உதவும் என்று தெரிவித்தார்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட பின்னர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் தனது உலகளாவிய மையத்தை சென்னையில் அமைப்பது எங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்றும், உலகப் புகழ்பெற்ற இத்தகைய பெரிய நிறுவனம் நமது மாநிலத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை, நமது இளைஞர்களின் திறமைக்குக் கிடைத்த சான்றாகும் என்றும், இந்த முதலீடு, இதுபோன்ற உயர் நிறுவனங்கள் வருவதற்குத் தமிழ்நாடு ஒரு சிறந்த இடம் என்பதை நிரூபிக்கும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மேலும், தமிழ்நாட்டிலுள்ள திறமையான இளைஞர்களுக்குப் பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்துடனான இப்பயணம் நீண்ட காலம் வெற்றிகரமாகத் தொடர தமிழ்நாடு அரசு சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றம் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் திரு. ஆனந்த் வரதராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

”என்னை ஒழித்துவிட்டதாக நினைப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்” - பாஜக கருப்பு முருகானந்தம் காட்டம்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பு முருகானந்தம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தமிழக பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். டெல்டா பா.ஜ.க-வின் முகமாக இருந்தவர். கடந்த சட்டமன்றத் த... மேலும் பார்க்க

ஸ்டாலின், எடப்பாடி முதல் சூர்யா, கார்த்திக் வரை; பிரபலங்கள் குவிந்த திருமண விழா; பின்னணி என்ன?

சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சீமான், திருமாவளவன், அண்ணாமலை உள்ளி... மேலும் பார்க்க

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

ஹார்முஸில் தொடங்கிய பிரச்னை: France-ல் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு; இந்தியாவுக்கும் சிக்கல்?

ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிலிருந்து ஒரு சில நாடுகள் எப்படியோ தப்பித்துவிட்டாலும், சில நாட... மேலும் பார்க்க

TVK vs CPM: ``தவெக அரசில் இன்னும் ஜனநாயகப் பூர்வமான அணுகுமுறை தேவை" - சிபிஎம் சண்முகம் விமர்சனம்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,``புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக பேசுகிறார்கள். ஒரு திட்டம் என்றால் முதலில் DPR – Detailed Project Report தயாரிக்கப்படும். அதன்... மேலும் பார்க்க

"கேள்வி கேட்டா பரவாயில்ல, பாட்டு பாடுனா நாங்க என்ன பண்றது?" - தவெகவைச் சாடிய உதயநிதி

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந... மேலும் பார்க்க