செய்திகள் :

ஸ்லோ பாய்சன் கொடுத்து மனைவி கொலை; UPI செயலியில் காதலியுடன் மெசேஜ்- நாடகமாடிய டாக்டர் சிக்கியதெப்படி?

post image

பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாதம் கிருத்திகா ரெட்டி என்பவர் தனது வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அவரின் கணவர் டாக்டர் மகேந்திர ரெட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் கிருத்திகா இறந்து போனார். இது இயற்கையான மரணம் என்றே போலீஸார் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால் விசாரணையில் மகேந்திர ரெட்டிக்கு இக்கொலையில் தொடர்பு கொண்டு இருப்பது தெரிய வந்தது. மகேந்திர ரெட்டி தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி தன் மனைவி படிப்படியாக இறக்கும் வகையில் அவருக்கு மருந்து கொடுத்து கொலைசெய்துள்ளார். அதோடு டாக்டர் மகேந்திர ரெட்டிக்கு அவர் பணிபுரியும் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஹர்ஷிதா என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இருவருக்கும் இடையேயான தகவல் தொடர்புகள், மெசேஜ்கள் இக்கொலைக்கு முக்கிய ஆதாரமாக சிக்கி இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் செய்தால் தெரிந்துவிடும் என்பதால் யு.பி.ஐ. பேமென்ட் செயலி மூலம் அனைத்து தகவல்களையும் மகேந்திர ரெட்டி தனது காதலிக்கு அனுப்பி இருந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட டாக்டர் மகேந்திரா மீது போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஆவண சாட்சியங்களை போலீஸார் இணைத்துள்ளனர்.

`போலீஸாரிடம் நண்பர்கள் என்று சொல்!'

போன்பே மூலம் மகேந்திர ரெட்டி தனது காதலியுடன் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். அதோடு அவற்றை அழித்துவிட்டார். ஆனால் தடயவியல் நிபுணர்கள் அத்தகவல்களை மீட்டு எடுத்துள்ளனர். மேலும் மகேந்திரா தனது மனைவியை கொலைசெய்வதற்கு முன்பே, அது குறித்து தனது காதலியுடன் மெசேஜ் மூலம் தெரிவித்துள்ளார். மகேந்திரா அனுப்பி இருந்த ஒரு மெசேஜில், "இந்தச் செய்தியைப் பார்த்த பிறகு, எனக்கு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ செய்ய வேண்டாம். அனைத்தும் ஒரு நிலைக்கு வந்த பிறகு, நானே உன்னை அழைப்பேன். பெரும்பாலும் காவல்துறையினர் உன்னை அழைத்து, நமக்கிடையேயான உறவு என்ன என்று விசாரிப்பார்கள்; அப்போது நாம் நண்பர்கள் என்று கூறு'' என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு மெசேஜில், ''என்னிடம் ஆதாரம் இல்லை, ஆனால் நான் கிருத்திகாவைக் கொன்றுவிட்டேன். நான் சிறைக்குச் செல்வேன்''என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனது காதலிக்கு அனுப்பிய செய்தியில், குற்றத்தை செய்துவிட்டு அதற்கு வருந்துவது போன்ற தகவல்கள் இடம் பெற்று இருந்தது. தான் இனி "ஒரு கொலையாளியைப் போலவே வாழ்வேன்" என்று மகேந்திரா குறிப்பிட்டு இருந்தார். இருவரும் 2024ம் ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். ஒரே ஆண்டில் தனது காதலிக்காக மனைவியை மகேந்திர ரெட்டி கொலைசெய்துள்ளார்.

"வெளிநாட்டுப் பாணியில் காதலைச் சொல்கிறேன்" - காதலனைக் கட்டிவைத்து எரித்து கொன்ற பெண்; என்ன நடந்தது?

பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் வசித்து வந்தவர் பிரேர்னா (27). இவர் அங்குள்ள மொபைல் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே கடையில் வேலை செய்து வந்த கிரண் என்பவரை பிரேர்னா காதலித... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த தாய்; 11 வயது மகனைக் கொன்று டிரம்மில் மறைத்த நபர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் வேலை செய்து வந்தார். ஆஷா வீட்டு வேலை செய்து வந்தார். ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த மதுரா(45) என்பவர் ... மேலும் பார்க்க

விருதுநகர்: தேர்தல் கால ஆர்டர்; விதிமீறல், அதிக பணிச்சுமை! பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த 19-ம்... மேலும் பார்க்க

காதலை கைவிட மறுப்பு: 16 வயது மகளை கொலை செய்து முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் தெரியாமல் செய்த தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் விஜய் செளபே. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 10வது வகுப்பு படித்து வரும் அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது விஜய்-க்கு தெரிய வந்தது. என... மேலும் பார்க்க

காதல் மனைவிமீது சந்தேகம், வீடு முழுக்க கேமரா; இரண்டு மகள்களைக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா (48). இவர்களுக்கு 11 வயதில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். பீகாரை... மேலும் பார்க்க

Vinay Kulkarni: பாஜக பிரமுகர் கொலை வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு... மேலும் பார்க்க