வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - 600 பேருக்கு வேலை...
ஹரியானா: "5,21,619 போலி வாக்காளர்கள்; ஒரு நபர் 100 வாக்கு செலுத்தியிருக்கிறார்" - ராகுல் காந்தி
நாளை (நவம்பர் 6) பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார்.
ஹரியானாவில் 5,21,619 போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், ஒரு தொகுதியில் ஒரே நபரின் புகைப்படம் 100 வாக்காளர்களின் பெயர்களில் இருப்பதாகவும், 8-ல் ஒரு வாக்கு போலியானது என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைத்திருக்கிறார்.
மேலும், வாக்குத் திருட்டு என்பதைத் தாண்டி ஹரியானாவில் ஆட்சியே திருட்டுதான் என்றும் வாக்குத் திருட்டு தொடர்பாக தான் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு 100% தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் உறுதியாகக் கூறியிருக்கிறார்.
LIVE: #VoteChori Press Conference - The H Files https://t.co/IXFaH9fEfr
— Rahul Gandhi (@RahulGandhi) November 5, 2025
இதுகுறித்துப் பேசியிருக்கும் ராகுல் காந்தி, "ஹரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாலேயே காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை. ஹரியானா தேர்தலில் 5,21,619 போலி வாக்காளர்கள் இருப்பது உறுதியாகியிருக்கிறது. ஒரே நபரின் புகைப்படம் 100 வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கிறது.
இந்திய வாக்காளர் அடையாள அட்டைகளில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல்களின் புகைப்படங்கள்கூட இருக்கின்றன. ஹரியானா தேர்தலில் 8-ல் ஒரு வாக்கு போலியானது. வாக்குத் திருட்டு என்பதைத் தாண்டி ஹரியானாவில் ஆட்சி திருட்டே நடந்துள்ளது" என்று பேசியிருக்கிறார் ராகுல் காந்தி

















