செய்திகள் :

`ஹார்ட் டிஸ்க் மாயம் என மின் வெட்டு பிரச்னையை திசை திருப்ப முயற்சி’ – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!

post image

புதுப்பிக்கப்பட்ட கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழ்நாட்டில் ஒரு அமைச்சரையே மிரட்டக்கூடிய அளவிற்கு ஒருவருக்கு துணிச்சல் இருக்கிறது என்றால், சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு உள்ளது என்று பார்க்க வேண்டும். இப்படி இருக்கும்போது சாமானியர்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? தமிழ்நாட்டில் மின் வெட்டு காரணமாக மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை மின்சாரத் துறை அமைச்சர் மின் விநியோகம் தொடர்பாக அதிகாரிகளை அழைத்து முழுமையான ஆய்வுக் கூட்டத்தை மேற்கொள்ளவில்லை. டெண்டர்களை பொறுத்தவரை அதிகாரிகள் குழுவினர்தான் இறுதி செய்வார்கள். அதில் எந்த தவறும் செய்ய முடியாது.

துறை சார்ந்த அமைச்சர்கள் அந்த துறை சார்ந்து முழுமையாக ஆராயாமல் அரைகுறைதனமாக நிர்வாகம் நடத்துகின்றனர். அவர்களிடம் சுத்தமாக நிர்வாகத் தன்மை இல்லை. மின் வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஏதோ தவறுகள் நடந்ததைப் போல தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஹார்ட் டிஸ்க் தொலைந்த விவகாரத்தில் தவறு நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. முதலில் மின் வெட்டை சீரமையுங்கள், பிறகு துறையை சீரமைக்கலாம். துறைகள் எல்லாம் சீராக தான் உள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அரசு மாறலாம், அதிகாரிகள் மாற மாட்டார்கள். எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதே மின்வாரிய அதிகாரிகள்தான் பணிபுரிவார்கள். ஒரு சதவீத கருப்பு ஆடுகள் இருந்தால், மீதமுள்ள 99 சதவீதம் பேரை கொண்டு அவர்களை கண்டுபிடிக்கலாம் அல்லவா? இது ஆடவே தெரியாதவர்கள் வீதி கோணல் என்பார்களாம் என்பதுபோல உள்ளது. துறை சார்ந்த புரிதலும் இல்லை, புரிந்து கொள்வதற்கான தகுதியும் இல்லை. அதற்கு பதிலாக தவறு நடந்ததை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள், அந்த முயற்சி ஒருபோதும் எடுபடாது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கேட்கலாம், ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு கால அவகாசம் கேட்க முடியாது. இந்த அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களின் நன்மதிப்பை இழந்துள்ளது. ரீல்ஸ் மூலமாக வந்த த.வெ.க ஆட்சி, அதே முயற்சியை தான் மீண்டும் எடுக்கிறார்கள். இந்த ஆட்சி ரியல் ஆட்சி  இல்லை, ரீல்ஸ் ஆட்சிதான் என்பதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். தி.மு.க-வை அழிக்க, ஒழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து, ஒழிந்து போயிருக்கிறார்கள். தி.மு.க என்பது ஒரு ஆலமரம். எங்களை தாண்டி கோடிக்கணக்கான இளைஞர்கள் பணி செய்ய தயாராக இருக்கிறார்கள். தி.மு.க-வை பற்றி பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதால், தி.மு.க-வை விமர்ச்சிக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த அரசைப் பொறுத்தவரை வெளிப்படைத் தன்மையில்லை என்று மக்கள் கூறுகிறார்கள், மக்களிடம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது. இன்றைய சூழலில் சட்டமன்ற பொது தேர்தல் மீண்டும் நடந்தால் 200 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெறும். இடைத்தேர்தலில் கட்சி தலைவரின் உத்தரவை பொறுத்தே அதைப் பற்றி பேச முடியும். தி.மு.க-வை பொறுத்தவரை அரசு செய்யக்கூடிய தவறுகளை தயக்கமில்லாமல் சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் தைரியமாக தட்டிக் கேட்போம். மின்துறை அமைச்சர் இதை காணோம், அதை காணோம் எனப் பதற்றத்தை உருவாக்குவதற்கு எல்லாம், ஒருநாளும் தி.மு.க பயப்படாது. மிசாவை கண்டே பயப்படாத இயக்கம் தி.மு.க, தி.மு.க-வினர் ஜெயிலைக் கண்டு பயந்தது இல்லை” என்றார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க