செய்திகள் :

ஹோலி: தன் மீது சாயம் பூசியதை எதிர்த்த இளைஞர் கொலை!

post image

ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் தன் மீது சாயம் பூசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தௌஸா மாவட்டத்தின் ரல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 25) என்ற இளைஞர் கடந்த மார்ச்.12 அன்று மாலை அங்குள்ள நூலகத்தில் அரசு தேர்வுக்காக படித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அஷோக், பாபு மற்றும் காலுராம் ஆகியோர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஹன்ஸ்ராஜின் மீது சாயம் பூச முயற்சித்துள்ளனர்.

அதற்கு ஹன்ஸ்ராஜ் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கோவமடைந்த அவர்கள் மூவரும் ஹன்ஸ்ராஜை கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவரை பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படிக்க: பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக்கொலை!

இதனைத் தொடர்ந்து, இந்த கொலையால் கோவமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் ஹன்ஸ்ராஜின் உடலுடன் தேசிய நெடுஞ்சாலையை முடக்கி நேற்று (மார்ச் 13) அதிகாலை 1 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், கொலையாளிகள் மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் கொலை செய்யப்பட்ட ஹன்ஸ்ராஜின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

பின்னர், காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு அவரது உடல் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கானின் அறிவுரையை நினைவுகூர்ந்த வெங்கடேஷ் ஐயர்!

ஷாருக்கான் கொடுத்த அறிவுரையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டன் வெங்கடேஷ் ஐயர் நினைவு கூர்ந்துள்ளார்.ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம... மேலும் பார்க்க

13 ஆண்டுகளுக்கு பின் சிரியாவில் ஜெர்மனி தூதரகம் மீண்டும் திறப்பு!

சிரியாவில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் ஜெர்மனி நாட்டு தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சிரியாவில் முன்னாள் அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டு போர் துவங்கிய காலத்தில் அந்நாட... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்! - ஹவுதி படைகள் அறிவிப்பு

இஸ்ரேல் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் மீது யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகின்றது. இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ்விலுள்ள பென் குரியோன் விமான நிலையத்தின் மீ... மேலும் பார்க்க

பலூசிஸ்தான்: இறந்தவர்களின் உறவினர்கள் மீது காவலர்கள் தடியடி! பெண்கள் படுகாயம்!

பாகிஸ்தான் நாட்டில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண வந்த உறவினர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடி தாக்குதலில் ஏராளமான பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவேட்டாவிலுள... மேலும் பார்க்க

மார்ச் 22-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள்(மார்ச் 22) சென்னையில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க