செய்திகள் :

$1.8 பில்லியன் வருவாய்! ‘The Odyssey’ திரைப்படத்தின் உலகளாவிய வசூலை ஒரே நாளில் முந்திய GTA 6!

post image

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘Grand Theft Auto VI’ (GTA 6) வீடியோ கேம், வெளியீட்டு நாளிலேயே வருவாயில் புதிய சாதனையைப் படைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை ஆய்வு நிறுவனமான Sensor Tower வெளியிட்ட மதிப்பீட்டின்படி, GTA 6 இதுவரை சுமார் 1.84 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹16,500 கோடி) வருவாயை ஈட்டியுள்ளது. மொத்தம் 1.905 கோடி பிரதிகள் விற்பனையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GTA 6

இந்த வருவாய், கடந்த ஜூலை மாதம் வெளியான ‘The Odyssey’ திரைப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் வசூலான 1.805 பில்லியன் டாலரையும் முந்தியுள்ளது. இதன் மூலம் ஒரு வீடியோ கேம், உலகளாவிய திரைப்பட வசூலை மிஞ்சும் அளவுக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, GTA 6-ன் மொத்த வருவாயில் 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை முன்பதிவுகள் மூலமாகவே கிடைத்துள்ளதாக Sensor Tower மதிப்பிட்டுள்ளது. மேலும், விற்பனையில் சுமார் 75 சதவீதம் PlayStation பதிப்பையும், மீதமுள்ள 25 சதவீதம் Xbox பதிப்பையும் சார்ந்துள்ளது.

GTA 6

GTA தொடரை வெளியிடும் Rockstar Games நிறுவனத்தின் தாய் நிறுவனமான Take-Two Interactive, முன்பதிவு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், கடந்த வாரம் வெளியிட்ட நிதி அறிக்கையில், முன்பதிவுகள் தங்களது ஆரம்ப எதிர்பார்ப்புகளைவிட அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வெளியீட்டுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஒரு பில்லியன் டாலர் வருவாய் எல்லையைக் கடந்த GTA 6, இனி எந்த அளவுக்குச் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு கேமிங் உலகில் அதிகரித்துள்ளது.

ஆளவந்தான்: `அந்த கார்ட்டூன் ஐடியா கிரேஸி மோகனுடையது!' – நினைவுகளை பகிரும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

சினிமா விகடன் சார்பாக கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்' படத்தின் 25-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் படத்தின் உருவாக்கம், தொழில்நுட்ப சவால்கள் மற்றும் 'கில் பில்' தொடர்பான சுவாரச... மேலும் பார்க்க

`வருவாய்'- கிராமி விருது போட்டியில் நுழைந்த முதல் தமிழ்ப் பாடல்: தேவன் ஏகாம்பரம் - சுஷா நெகிழ்ச்சி!

இசையமைப்பாளர் தேவன் ஏகாம்பரம் மற்றும் பாடகி சுஷா ஆகியோரின் கூட்டணியில் உருவான 'வருவாய்' (Varuvaaiy) என்ற பாடல், கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையைப் படை... மேலும் பார்க்க

Super Singer Season12: நடுவர்களாக முன்னாள் நட்சத்திரப் போட்டியாளர்கள்! - வெளியானது புரோமோ!

'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் 20-வது ஆண்டு சாதனையைக் கொண்டாடும் வகையில், 'சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ்' நிகழ்ச்சியின் பிரமாண்ட அறிமுக ப்ரோமோவை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள... மேலும் பார்க்க

ராஜஸ்ரீ: உயிருக்குப் போராடும் பாரதிராஜா பட நாயகி... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

இயக்குநர் பாரதிராஜாவின் 'கருத்தம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஜஸ்ரீ. முதல் படப் பெயரே அவரது அடையாளமாகவும் மாறிப்போனது. 'கருத்தம்மா' ராஜஸ்ரீயாக தொடர்ந்து நடித்துக்கொண்... மேலும் பார்க்க

ரோஜா பாட்டி முதல் குணச்சித்திர ராணி வரை! – வத்சலா ராஜகோபாலின் கலைச் சரித்திரம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க