செய்திகள் :

"100 கோடி கொடுத்தாலும் இனி சோசியல் மீடியாவுக்கு வரமாட்டேன்; ஏன்னா..." - ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்

post image

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் சமீபத்தில் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

அப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸுடன் 'லவ்' வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.

Gatta Kusthi 2 - Aishwarya Lekshmi
Gatta Kusthi 2 - Aishwarya Lekshmi

இதுமட்டுமல்லாமல், தமிழில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு ஃபீமேல் சென்ட்ரிக் படம், 'தீவினை போற்று' வெப் சீரிஸ் என அடுத்தடுத்த லைன்-அப்களை வைத்திருக்கிறார்.

கடந்தாண்டு அவர் சமூக வலைத்தளப் பக்கங்களிலிருந்து முழுமையாக விலகினார். அது குறித்து 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வுக்கு அளித்திருக்கும் பேட்டியில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், "சமூக வலைத்தளப் பக்கங்களில் நான் பாதுகாப்பாக உணர்ந்ததே இல்லை. பலர் என்னுடைய உடலைப் பற்றித் தேவையில்லாமல் விமர்சித்தார்கள். என் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவிட்டார்கள்.

அங்கு வரும் ஒரே ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட உலகத்தில் இருக்கிற எல்லாரும் நம்மை வெறுப்பது போன்ற ஒரு உணர்வைக் கொடுத்துவிடும். சோஷியல் மீடியா என்னை ரொம்பவே எச்சரிக்கை உணர்வு கொண்டவளாக மாற்றிவிட்டது.

ஐஸ்வர்யா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி

நேரில் மனிதர்கள் வந்து என்னிடம் பேச முற்படும்போது கூட, அந்த உரையாடலைச் சீக்கிரமாக முடித்துவிட்டு ஓடிவிட வேண்டும் என்றுதான் தோன்றும். உண்மையைச் சொன்னால், எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தால் கூட நான் சோஷியல் மீடியா பக்கம் இனி வரமாட்டேன்.

இருப்பினும் சினிமா செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், என் படங்கள் எப்படிப் போகின்றன என்று பார்க்கவும் என்னுடைய செல்லப் பிராணியின் இன்ஸ்டாகிராம் கணக்கைத்தான் இன்னமும் பயன்படுத்தி வருகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

CJP: "இது அரசியல் இல்லை... மனிதநேயம்!" - டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு வரலட்சுமி ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க

பிதாமகன் : அன்பின் ஈரம்! | ஆதி தாமிரா | சினி'ஸ்கோப் 08

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!சினி'ஸ்கோப் 08பிதாமகன் : அன்பின் ஈரம்!”பெத்தவ புகையோடிப் போச்சேவளத்தவன் புகைகூட... மேலும் பார்க்க

National Awards: "தனுஷூக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது!" - கஸ்தூரி ராஜா பேசியது என்ன?

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்... மேலும் பார்க்க

Jana Nayagan: "'ஜன நாயகன்' லீக் ஆனபோது விஜய் சார் என்கிட்ட சொன்ன விஷயம்..." - அ. வினோத்

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறா... மேலும் பார்க்க

Jana Nayagan: "ஜனநாயகனுக்கு 'ஏ' சான்றிதழ் வாங்கியதற்கான காரணம் இதான்" - அ. வினோத் பேட்டி

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறா... மேலும் பார்க்க

Jana Nayagan Exclusive: "நிறைய பேர் 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்துவிட்டார்கள்; ஆனால்..." - அ. வினோத்

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கி... மேலும் பார்க்க