Kerala Lottery: கண்ணூரில் விற்பனையான லாட்டரிக்கு ரூ.20 கோடி பரிசு; அதிஷ்டசாலியை ...
1000-க்கு 'T' பதிலாக ஏன் 'K' பயன்படுத்தப்படுகிறது? - பின்னால் இருக்கும் சுவாரஸ்ய தகவல் தெரியுமா?
எண்களில் ஆயிரத்தை 1k என்று குறிப்பதை நாம் பார்த்திருப்போம். மில்லியனுக்கு 'M' என்ற வார்த்தையும் பில்லியனுக்கு 'B' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படும் இடத்தில் ஆயிரத்திற்கு ( thousand) மட்டும் ஏன் 'T' என்ற வார்த்தை பயன்படுத்தாமல் 'k' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம் இதற்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம் அன்றாட விஷயங்களில் நிறைய எழுத்துக்களுக்கு நிறைய அர்த்தங்களை கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் சமூக வலைதளங்களிலும் சரி, பணத்திலும் சரி இணையதளங்களிலும் சரி ஆயிரம் என்ற எண்ணிற்கு ஆங்கில எழுத்தான k என்று குறிப்பிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் ஏன் k என்ற எழுத்து பயன்படுத்தப்படுகிறது?
மேற்கத்திய நாடுகள் கிரேக்கம் மற்றும் ரோமன் கலாசாரத்தின் ஆதிக்கத்தையே அதிகம் கொண்டிருக்கின்றன. இந்த 'K' என்ற எழுத்து பயன்படுத்துவதற்கும் இந்த கலாசாரம் தான் காரணம். கிரேக்கம் மொழியில் 'chilioi' என்றால் ஆயிரம் என்று பொருள். கிரேக்க வார்த்தையான Chilioi என்பது பிரெஞ்சுக்காரர்களால் கிலோ என்று சுருக்கப்பட்டது. அதற்கு பிறகுதான் கிலோ மீட்டர், கிலோ கிராம் போன்றவை வரையறுக்கப்பட்டது.
அந்த 'Kilo' என்பதற்காக தான் ‘K' என்ற குறியீடு கொடுக்கப்பட்டது. மேலும் மில்லியன் என்ற எண்ணிற்கு 'M' என்ற எழுத்தும், பில்லியன்-க்கு 'B' என்பதை போல ட்ரில்லியன் என்பதற்கு 'T' என குறிப்பிடப்படும். இதானல் தான் ஆயிரம் என்பதற்கு 'T' என்ற எழுத்து பயன்படுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.