செய்திகள் :

118 சவரன் நகை கொள்ளை... வீடியோவால் வந்த வினை? - நகைகளை காண்பித்த பெண் யூடியூபர் வீட்டில் அதிர்ச்சி!

post image

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் பகுதியில் அமைந்துள்ள வி.ஐ.பி கார்டனில் வசித்துவருபவர் வினோத்குமார். இவர் கிராம்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மதுமிதா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். மதுமிதா யூடியூபராக உள்ளார். வினோத்குமார் குடும்பத்துடன் நேற்று மாலை ஷாப்பிங் செல்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். ஷாப்பிங் முடிந்து வர இரவு சுமார் 11 மணிக்கு மேல் ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்து அவர்கள் முன் கதவை திறக்க முயன்றபோது திறக்க முடியவில்லை. கதவின் லாக்கில் ஏதோ பிரச்னை ஆகிவிட்டது என நினைத்த அவர்கள், மரவேலைச் செய்யும் தொழிலாளியை அழைத்துள்ளனர். குழந்தையுடன் வீட்டுக்குள் செல்ல முடியாமல் அவர்கள் நிற்பதால் தொழிலாளி உடனடியாக அங்கு சென்று முன்பக்க கதவின் லாக்கை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதாக மரவேலைச் செய்யும் தொழிலாளி தெரிவித்துள்ளார். பின்னர் வினோத்குமாரின் அனுமதியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு இருந்த பகுதி கட்டர் மெஷின் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களது பெட்ரூமில் இருந்து சுமார் 118 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கட்டரால் உடைக்கப்பட்ட கதவு

இது குறித்து தகவலின்பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மதுமிதா வீட்டில் இருக்கும் பணம், தங்க நகை உள்ளிட்டவற்றைத் தனது யூடியூப் சேனலில் வீடியோவாகப் போட்டுள்ளார். அதில் சிலர் அவரது வீட்டில் கொள்ளையடிக்கப் போவதாக கமென்ட் பதிவிட்டுள்ளனர். அதற்கு, தனக்கு 3 வீடுகள் இருப்பதாகவும் அதில் எந்த வீட்டில் கொள்ளையடிப்பாய் என கிண்டலாக மதுமிதா பதில் போட்டதாகவும் தெரியவந்துள்ளது. கமென்ட் போட்ட யாராவது கொள்ளையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கொள்ளை நடந்த வீடு

கொள்ளை நடந்த வீட்டை போலீஸார் ஆய்வு செய்தபோது, பின்பக்க கதவு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்கில் இருந்து மின்சாரம் எடுத்து கட்டிங் மெஷின் மூலம் கதவை வெட்டி வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சுவரை நோக்கி திருப்பி வைத்து, இந்தக் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வுசெய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

பீகாரில் மீண்டும் அட்டூழியம்: ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண்ணை வழிமறித்து துன்புறுத்திய கும்பல்

பீகார் மாநிலம் ஜமுய்யில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தைப்போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அங்குள்ள சமஸ்திபூர் அருகில் இருக்கும் ஜகத்சிங்பூர் என்ற கிராமத்தில் மோட்டார் சைக்கிள்களில... மேலும் பார்க்க

`வேலை எல்லாம் போகல.!' - உயர் சம்பளத்தை விட்டு கனடாவிலிருந்து இந்தியா திரும்ப பெண் சொன்ன காரணம்!

விசா பிரச்னையால் அமெரிக்காவில் இருந்து அதிகமான இந்தியர்கள் வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா மட்டுமல்லாது கனடாவை சேர்ந்த இந்தியர்களும் இதே போன்று இந்தியாவிற்கு வந்து கொண... மேலும் பார்க்க

`மும்பை கடற்கரையோரம் 7 மாடி சொகுசு கட்டடம்' - ரூ.711 கோடிக்கு வாங்கிய `ஏஞ்சல் ஒன்' நிறுவன தலைவர்!

மும்பை ஜுகு, பாந்த்ரா, கோரேகாவ், அந்தேரி பகுதியில் ஆடம்பர குடியிருப்பு கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே தொழிலதிபர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பல நூறு கோடி செலவில் அடுக்கு மாடி... மேலும் பார்க்க

`Views அதிகமாகணும்!’ - 9 வயது சிறுவன் செய்த Click… அப்பாவின் ₹1.13 கோடி காலி!

YouTube-ல் வீடியோ போட்டால் views வரணும், subscribers அதிகமாகணும் என்பதுதான் பல Content Creators-ன் ஆசை. ஆனால், அதற்காக ஒரு 9 வயது சிறுவன் செய்த காரியம் தற்போது இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது!அமெ... மேலும் பார்க்க

"ஏன் வேறு வேலை இல்லையா என்று கேட்கிறார்கள்" - லாரி டிரைவராகப் பணியாற்றும் 25 வயது விமானப் பணிப்பெண்

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் தான் விமான பணிப்பெண் வேலைக்குப் படித்து விட்டு லாரி ஓட்டிக்கொண்டிருக்கிறார். இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான நேஹா தாக்கூருக்கு, சிறுவயதிலிருந்தே லாரி அவ... மேலும் பார்க்க

அவதூறு ரீல்ஸ்; செருப்புடன் மன்னிப்பு கேட்கவைத்த ராஜ் தாக்கரே கட்சியினர் - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுபம் குறித்து புனேயை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலம் மகேஷ் மோடே சோசியல் மீடியாவில் அவதூறாக செய்தி வெளியிட்ட... மேலும் பார்க்க