சர்வதேச தரத்தில் அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர் - 'மிஷன் சான்டா'வில் எடிட்டர்...
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களா? - இந்திய பாதுகாப்புப் படை, கடற்படையில் வேலைவாய்ப்பு!
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
தேசிய பாதுகாப்பு அகாடமியிலும், கடற்படை அகாடமியிலும் பணி.
மொத்த காலிப்பணியிடங்கள்: 394
வயது வரம்பு: ஜூலை 1, 2007 முதல் ஜூலை 1, 2010 வரை பிறந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.56,100
கல்வித் தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமி - 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடற்படை அகாடமி - இயற்பியல், வேதியியல், கணிதம் கொண்ட பிரிவில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் திருமணம் ஆகியிருக்கக் கூடாது.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்துத் தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமைச் சோதனை.
தமிழ்நாட்டில் எங்கே தேர்வு நடத்தப்படும்?
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்.
புதுச்சேரி.
தேர்வு தேதி: ஏப்ரல் 12, 2026
விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in
விண்ணப்பிக்க கடைசித் தேதி: டிசம்பர் 30, 2025
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!



















