செய்திகள் :

`150 போர் விமானம், 5 மாத உளவு, டெல்டா ஃபோர்ஸ்' - வெனிசுலா அதிபர் அமெரிக்காவிடம் பிடிப்பட்டது எப்படி?

post image

அமெரிக்க படைகள் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சமீபத்தில் அவர்களின் நாடண்டுக்குள் நுழைத்து பிடித்து சென்று இருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா நினைத்தால் எந்த நாட்டிலும் நுழைந்து தாக்குதல் நடத்த முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருப்பதாக சொல்கிறது அமெரிக்கா.

நேற்று அட்லாண்டிக் கடலில், வெனிசுலாவில் இருந்து எண்ணெய்யை எற்றி சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பலை விரட்டி பிடித்து ரஷ்யாவிடமும் தனது வாலை ஆட்ட ஆரம்பித்து இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இச்செயல் உலக நாடுகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. மிகவும் பாதுகாப்பு மிக்க வெனிசுலாவில் எப்படி அமெரிக்க படைகள் அதிபர் நிகோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் பிடித்தனர் என்பது மர்மமாகவே இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கா நிகோலஸை பிடிக்க போட்ட திட்டம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

5 மாத கண்காணிப்பு

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவிக்கு வந்தவுடன், வெனிசுலாவை தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார். வெனிசுலாவில் அதிக அளவில் கச்சா எண்ணெய் இருக்கிறது.

அந்த எண்ணெய் தனக்கு தேவை என்பதை உணர்ந்து, அதற்காக ட்ரம்ப் காய் நகர்த்த ஆரம்பித்தார். இதற்கான பொறுப்பை ட்ரம்ப் உளவுத்துறையான சி.ஐ.ஏவிடம் ஒப்படைத்து இருந்தார். அவர்கள் தங்களது வேலையை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கினர். நிகோலஸ் வசிக்கும் நகரத்தில் சி.ஐ.ஏ அதிகாரிகள் தங்கி இருந்து நிகோலஸ் வாழ்க்கை முறை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர். அதோடு அவர் எங்கெல்லாம் செல்கிறார், எந்த இடத்தில் தங்குகிறார் என்ற விபரங்களை சேகரித்து அனுப்பிக்கொண்டிருந்தனர். முழுமையான தகவல்கள் கிடைத்த பிறகு அடுத்த கட்ட ஆபரேசனுக்கு அமெரிக்கா தயாரானது.

மற்றொரு பின்லேடன், சதாம் வேட்டை

மிகவும் ஆபத்தான ஆபரேசன் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை டெல்டா போர்ஸ் எனப்படும் பிரத்யேக சிறப்பு படையிடம் ட்ரம்ப் ஒப்படைத்தார். இப்படை பொதுவாக தீவிரவாதிகளை பிடிக்க, மீட்பு பணிகள், தீவிரவாத ஆபரேசன் என குறிப்பிட்ட செயல்களில் மட்டுமே ஈடுபடுத்தப்படும்.

இப்படையின் பெரும்பாலான செயல்கள் வெளியில் வருவது கிடையாது. ஒரு சில ஆபரேசன்கள் மட்டும் வெளிச்சத்திற்கு வருவதுண்டு. 2001ம் ஆண்டு ஒசாமா பின்லேடனை தேடி அழித்தது, பாக்தாத் விமான தாக்குதல், சதாம் உசேனை பிடித்தது, சோமாலியா தாக்குதல் என அவர்களின் சில நடவடிக்கைகளை சொல்ல முடியும்.

நிகோலஸை பிடிக்க டெல்டா போர்ஸில் இரவு நேரங்களில் மட்டும் தாக்குதல் நடத்துவதில் மிகவும் புகழ்பெற்ற 160th SOAR என்ற படைப்பிரிவு பயன்படுத்தப்பட்டது. இப்படையில் 20 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இடம் பெற்று இருப்பார்கள்.

150 விமானங்கள்

நிகோலஸை பிடிப்பதற்கு அமெரிக்க படைகள் 150 போர் விமானங்களை பயன்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக B-1 Lancers, F-22 Raptors, F-35 Lightning IIs, F/A-18 Super Hornets, EA-18 Growlers மற்றும் E-2 Hawkeyes போன்ற போர் விமானங்கள் வெனிசுலா அதிபரை பிடிக்கும் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன.

இது தவிர உளவு பார்க்கவும், கண்காணிக்கவும் "Wraith" அல்லது "The Beast of Kandahar" என்று அழைக்கப்படும் RQ-170 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது. உளவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு அமெரிக்க ஆளில்லா விமானமும் இப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சி.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப்

நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் பிடித்தவுடன் அவரை முதலில் அமெரிக்க ராணுவ தளத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் USS Iwo Jima என்ற உயர் திறன் கொண்ட கப்பல் மூலம் நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

USS Iwo Jima (LHD-7) என்பது ஒரு மினி விமானம் தாங்கி போர்க்கப்பல் போல வேலை செய்யும் ஒரு பெரிய அமெரிக்க கடற்படைக் கப்பல் ஆகும். இது 840 அடி நீளமும், 140 அடி அகலத்தில் விமான தளமும் கொண்டது. கப்பல் கடற்படைகள் இந்த கப்பலில், ஹெலிகாப்டர்கள், ஜெட் விமானங்கள் மற்றும் படகுகளை கொண்டு செல்ல முடியும், நிகோலஸை பிடிக்கும் ஆப்ரேசனில் வெனிசுலாவை சேர்ந்த 24 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்ற தகவலும் வெளியானது.

கிரீன்லாந்து:``ஒவ்வொருவருக்கும் பணம் கொடுப்போம்" - அமெரிக்க அதிபர் 'சதி': கொந்தளிக்கும் உலக நாடுகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். டென்மார்க்கும் அமெரிக்காவும் பரஸ்பரம் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும... மேலும் பார்க்க

Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.ஆர்க்டிக் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் ராணுவ ரீதியான முக்கியத... மேலும் பார்க்க

49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகு... மேலும் பார்க்க

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வ... மேலும் பார்க்க