TVK : 'காரை மறித்த பெண் நிர்வாகி; நிற்காமல் சென்ற விஜய்! - என்ன நடந்தது?
2025- ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் பிசினஸ் அவார்ட்ஸை வென்ற ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்!
தென் இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் ஆபரண நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், தனது நம்பிக்கை மற்றும் சிறப்பின் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. டைம்ஸ் பிசினஸ் அவார்ட்ஸ் 2025-ல் ஆபரணத் துறையில் மிக நம்பகமான வரலாற்றுச் சிறப்புமிக்க பிராண்டு' என்ற பெருமைமிகு பட்டத்தை பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம், பாரம்பரிய கைவினை நுட்பத்தையும், நவீன புதுமையையும் இணைத்து பல தலைமுறைகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் அன்பையும் பெற்றிருக்கும் நிறுவனமாக ஜி ஆர். டியின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.

அற்புதமான கைவினைத் திறமைக்கும் வாடிக்கையாளர் முன்னுரிமைக்கும். தங்களை அர்ப்பணிக்கும் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முழுவதும் தங்களுடைய சிறப்பான அடையாளத்தை உருவாக்கி புதிய சந்தைகளிலும் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. ஜி ஆர்டி ஜுவல்லர்ஸ் தரம் வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறையான வணிக நடைமுறைகளை கடைபிடிப்பதின் மூலம் தென்னிந்தியாவின் ஆபரண உலகில் ஆடம்பரம், புதுமை மற்றும் நம்பிக்கையின் சின்னமாக தங்களை மாற்றியுள்ளது.
இன்று, 65 ஷோரூம்கள் தென்னிந்தியாவிலும், ஒரு ஷோரூம் சிங்கப்பூரிலும் என மொத்தம் 66 ஷோரூம்களுடன் செயல்பட்டு வரும் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ். தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் விலைமதிப்புள்ள ரத்தினங்கள் ஆகியவற்றில் பரந்த கலெக்ஷன்களை வழங்குகிறது.
1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் ஒரு சாதாரண ஆபரண நிறுவனமாக மட்டும் அல்லாமல், மக்களின் வாழ்க்கையின் அர்த்தமுள்ள தருணங்களை, அவர்களின் வடிவமைப்புகளின் மூலம் கொண்டாட்டமான தருணமாக மாற்றி வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து, சில்லறை வணிகத்தில் புதுமையை முன்னெடுத்து, பாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒருங்கிணைத்து, நகைத்துறையின் சக நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.

இந்த பெருமைமிகு சாதனை குறித்து பேசிய நிர்வாக இயக்குநர் திரு. ஜி. ஆர். ஆனந்த்" ஆனந்தபத்மநாபன் அவர்கள் கூறியதாவது மீண்டும் ஒரு முறை மிக நம்பகமான சிறப்புமிக்க நிறுவனம் என அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். இந்த விருது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், முழு ஜி.ஆர்.டி குடும்பத்தின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கை, கைவினைகளை மற்றும் காலத்தால் அழியாத அழகை பிரதிபலிக்கும் ஆபரணங்களை உருவாக்குவதே எங்கள் நிலையான குறிக்கோளாக இருந்து வருகிறது.
இதுகுறித்து தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்ட நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது டைம்ஸ பிசினஸ் அவார்ட்ஸ் 2025-ல் ஆபரணத் துறையில் மிக நம்பகமான வரலாற்றுச் சிறப்புமிக்க நிறுவனம்" என்ற விருதை 9-வது முறையாகப் பெறுவது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. இந்த அங்கீகாரம். எங்கள் வாடிக்கையாளர்களிட முள்ள நம்பிக்கையையும், ஜி ஆர்.டி.யை வரையறுக்கும் மதிப்புகளிடமுள்ள எங்கள் உறுதியையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

பாரம்பரியத்தில் வேரூன்றியவாறு தொடர்ந்து புதுமைகளை உருவாக்குவதில்தான் எங்கள் வெற்றி உள்ளது. ஜி.ஆர்டியை நம்பிக்கை மற்றும் சிறப்பின் பெயராக்கிய எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கும், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் போலுள்ள எங்கள் பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் என அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.




















