செய்திகள் :

'26 வருட பணி; சிந்தூர் ஆபரேஷன் வரை பங்களிப்பு!' - ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு

post image

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி(60). இவர், இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்து வாகா எல்லையில் தொடங்கி பத்தான்கோட், ரஜோரியின் பனிமலை, மதுரா, அசாம், செகந்திராபாத், கார்கில் போர், சிந்தூர் ஆபரேஷன் வரை தேசத்திற்காக பணியாற்றி வந்தார். இந்திய ராணுவத்தில் தன் உயிரை பணயம் வைத்து தொடர்ச்சியாக 26 ஆண்டுகள் தேசத்திற்காக பணியாற்றிய ராணுவ வீரரான முத்துசாமி பணி ஒய்வு பெற்றார். இந்நிலையில், பணிஓய்வுபெற்ற அவர், தனது சொந்த ஊரான மாயனூர் வருகை தந்தார். இதனிடையே, ரயில்வே ஸ்டேஷனில் திரண்ட ஊர் பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து, செண்டை மேளம் முழங்க, தேசிய கொடிகளுடன் மெயின்ரோடு, மாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

varaverpu

அப்போது, ராணுவ வீரர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அதில்,

"இந்திய ராணுவத்தில் தேசப்பற்று காரணமாக பணியில் சேர்ந்தேன். என்னை பார்த்து பத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் ஊரில் இருந்து ராணுவப் பணியில் சேர்ந்து இந்திய ராணுவத்திற்கும், இந்திய மக்களுக்கும் பணியாற்றினர் என்பது எனக்கு பெருமை அளிக்க கூடியதாக உள்ளது. அந்த மனநிறைவோடு ஓய்வுபெற்ற எனக்கு, ஊர் மக்கள் இன்னும் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளனர். இன்று ஊரே ஒன்றுகூடி என்னை ரயில் நிலையத்தில் வந்து வரவேற்றது என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்கிறது" என்றார்.

`SIR, வாக்குப்பதிவு இயந்திர முறையை நீக்க வேண்டும்'- மும்பை பேரணியில் தாக்கரே சகோதரர்கள் கோரிக்கை!

மும்பையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இணைந்து மிகப்பெ... மேலும் பார்க்க

வீவ்ஸ் & வொண்டர்ஸ்’26 : RmKV-யின் புதிய கலெக்சன் அறிமுகம்!

நூற்றாண்டுக்கும் மேலாக, தனித்துவமான பட்டுப் புடவைகளுக்காகவும், கைத்தறித் துறைக்கான சிறப்பான அர்ப்பணிப்பிற்காகவும் ஆரெம்கேவி சில்க்ஸ் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த மரபைத் தொடர்ந்து, புகழ்பெற்ற ஹம்ச தம... மேலும் பார்க்க

SIR முடிந்த மாநிலங்களில் விடுபட்ட, புதிய வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

மத்திய தேர்தல் கமிஷன் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் 13 கோடி வாக்காளர்கள் பட்டிய... மேலும் பார்க்க

"நிலத்தில் 99% பங்கு இருக்கும் அஜித் பவார் மகனுக்கு நில மோசடியில் தொடர்பு இல்லையா?" - கோர்ட் காட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை மலிவு விலைக்கு வாங்கியது தொடர்பாக மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான அமேடியா எண்டர்... மேலும் பார்க்க

"தளபதி விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்"- டெல்லி ரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்

டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே நடுரோட்டில் ஒரு பெண் படுத்துக்கொண்டு தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் தன்னைச் சந்தித்துக் கட்டிப்பிடிக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறி ரகளையில் ஈடுபட்டார... மேலும் பார்க்க

ஐநா: `சர்வதேச உச்சி மாநாட்டில் ஒலித்த தமிழரின் குரல்' - யார் இந்த சதீஷ் குமார்?

ஐக்கிய நாடுகள் சபையில் (UN) நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில், தமிழர்களின் தொன்மையான கட்டடக்கலை, பொறியியல் நுணுக்கம் மற்றும் உலகளாவிய மனிதநேயச் சிந்தனைகளை எடுத்துரைத்து உரையாற்றிய சென்னையைச் சேர்ந்த த... மேலும் பார்க்க