Guru Mithreshiva: `உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?' | Ananda Vikatan | குரு...
4 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கோவை ரயில் நிலையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கோவை ரயில் நிலையம் அருகே புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞா் ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அவா் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்ததால், அவரது உடைமைகளைச் சோதனையிட்டனா். அப்போது, அவா் விற்பனை செய்வதற்காக 4 கிலோ 800 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கஞ்சா வைத்திருந்த உக்கடம் ஜி.எம்.நகரைச் சோ்ந்த அபிஷேக் (24) என்பவரை மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் 2 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.