செய்திகள் :

"5,000 முதலீடு… 2 லட்சம் வருமானம் - ஹோம் மேக்கரிலிருந்து தொழிலதிபரான ஓபு உஷா"

post image

"5,000 ரூபாய் முதலீடு… இன்று ரெண்டு லட்சம் மாத வருமானம். ஹோம் மேக்கரிலிருந்து தொழிலதிபரா எனக்கான அடையாளத்தை உருவாக்கியிருக்கேன். எனக்கு பிசினஸ் ஆரம்பிக்கனும்னு ஆசை இருந்துச்சு. ஆனா, பெரிய அளவில் முதலீடு செய்ய பணம் இல்ல. உழைப்பை மட்டும் நம்பினேன். இன்னைக்கு நானும் ஒரு தொழிலதிபர்’’ - பெருமையாகப்  பேசுகிறார் ஒபு உஷா. 

ஓபு உஷா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஓபு உஷா. கடந்த 14 ஆண்டுகளாக டெரகோட்டா நகைகள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவர் தயாரிக்கும் நகைகள் துபாய், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உட்பட ஏழுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. பிசினஸ் தொடங்கியது முதல் லட்சங்களில் வருமானம் ஈட்டுவது வரை தன்னுடைய வெற்றிக் கதையை நம்மிடம் பகிர்கிறார் ஓபு உஷா. 

"எனக்குச் சொந்த ஊர் சேலம். எங்களுடையது நெசவாளர் குடும்பம். பொம்பள புள்ளைக்குப் படிப்பு வேணாம்னு பத்தாம் வகுப்புலயே படிப்பை நிறுத்தப் பார்த்தாங்க. போராடி காலேஜ் வரைக்கும் வந்தேன். பி.எஸ்சி ரெண்டாவது வருஷம் படிச்சிட்டிருந்தபோது கல்யாணம் ஆயிடுச்சு. படிப்பை பாதியில் நிறுத்திட்டு, கணவர் ஊரான குமாரபாளையத்தில் செட்டில் ஆயிட்டோம். குடும்பம், குழந்தைனு முழு நேர ஹோம் மேக்கரா மாறினேன். எல்லாரும் வேலைக்குப் போறதைப் பார்க்கும் போது, எனக்குனு ஓர் அடையாளம் இல்லையேனு ஏக்கம் இருந்துட்டே இருந்துச்சு. சின்ன பொருள் வாங்க கூட நிறைய தயக்கம் இருந்துச்சு. என் கணவர் என் ஆதங்கத்தைப் புரிஞ்சுகிட்டார்.

ஓபு உஷா

‘உன்னைத் தொலைச்சுட்டு பொறுப்பான குடும்பத்தலைவியா வாழ்றதுல அர்த்தமே இல்ல. உனக்கான அடையாளத்தை உருவாக்கு’னு சொல்லி முழு சுதந்திரம் கொடுத்தார் என் கணவர். எனக்கு சம்பாத்தியம் வேணும்னு நினைச்சேன். எனக்குனு ஒரு சம்பாத்தியம் இல்லாதது, என்னையே இழந்த மாதிரி இருந்துச்சு. படிப்பை முடிக்காததால வேலைக்கு எங்கேயும் போக முடியல. அதனால சொந்தமா வீட்டிலிருந்தே ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன்" என்ற ஓபு உஷா பிசினஸ் தொடங்கியது பற்றிப் பேச ஆரம்பித்தார். 

" எங்க ஏரியாவில் லுங்கிகள், புடவைகள் விற்பனைதான் பிரதான தொழில். அதை வாங்கி விற்பனை பண்ற தொழிலை நிறைய பேர் பண்ணிட்டு இருந்தாங்க. தேவைக்கு அதிகமா ஆள்களும் இருந்தாங்க. அதனால நான் புது பிசினஸ் ஐடியாவைத் தேடுனேன். ஐந்தாயிரம் ரூபாய் முதலீட்டில்  மெட்டீரியல்கள் வாங்கி நகைகள் செய்து தோழிகள்கிட்டருந்து விற்பனையை ஆரம்பிச்சேன்.ஃபேன்ஸி நகைகளுக்கு அடிக்கடி ஆர்டர் கிடைக்காது. விசேஷங்களின்போது தான் வரும். விற்பனையை அதிகரிக்க மாற்றுவழியை யோசிச்சபோது, சமூகவலைதளங்கள் மூலமா, டெரகோட்டா நகைகளை விற்பனை செய்யும் ஐடியாவை என் கணவர் கொடுத்தார்.

டெரகோட்டா

யூடியூப் பார்த்து டெரகோட்டா ஜுவல்லரி செய்யக் கத்துக்கிட்டேன். ஆரம்பத்துல நிறைய பொருள்கள் வீண் ஆச்சு. ஆனா, ஓவ்வொரு தவறையும் புது பாடமாக எடுத்துக்கிட்டேன்.  50க்கும் மேற்பட்ட நகைகள் செஞ்சு பயிற்சி பெற்ற பின் ஒரு நேர்த்தி வந்துச்சு. அப்புறம்  டெரகோட்டா நகைகள் விற்பனையை பிசினஸை ஆரம்பிச்சேன். என் முதலீடு ரெண்டாயிரம் ரூபாய் தான்” என்று ஓபு உஷா தன்னுடைய வளர்ச்சியை நினைவுகூர்கிறார்.”

"என் பெயரிலேயே ஃபேஸ்புக்கில் பிசினஸ் பக்கம் ஆரம்பிச்சேன்.  நான் செய்த நகைகளை மொபைலில் புகைப்படம் எடுத்து, விவரங்களுடன் அப்லோடு பண்ண ஆரம்பிச்சேன். ஆர்டர் வர ஆரம்பிச்சது. டெரகோட்டாவில் டெம்பிள்  ஜுவல்லரி டிசைனை அறிமுகம் செய்தேன். அந்தப் புது கான்செப்ட்டுக்கு நிறைய ஆர்டர் வந்தது. பட்டுப்புடவைக்கு மேட்சிங் நகைகள் ஏற்கெனவே இருந்துச்சு. புடவையின் டபுள் ஷேட்க்கு மேட்சாக டெரகோட்டா நகைகளை டிசைன் பண்ண ஆரம்பிச்சது தான் என்னோட பிசினஸ்ல பெரிய திருப்புமுனை. அந்த தனித்துவமான கான்செப்ட் தான் எனக்கு தனி அடையாளம் கொடுத்துச்சு. டிசைனர் ஆடைகளுக்கேற்ற நகைகள்,சிம்பிள் நகைகள் என வெரைட்டியான டிசைன்களை உருவாக்குனேன். நடிகை தேவையானி மேடம் உட்பட நிறைய செலிபிரெட்டிகள் என்கிட்ட டெரகோட்டா நகைகள் வாங்கியிருக்காங்க" என்றவரிடம் டெரகோட்டா நகைகள் உருவாக்கம் பற்றிக் கேட்டோம்.

டெரகோட்டா

"சுத்தம் செய்யப்பட்ட களிமண்ணை வாங்கி, தண்ணீரில் பிசைந்து டிசைன் உருவாக்குகிறோம். அதை உலர்த்தி, வெப்பத்தில் உறுதிப்படுத்தி, வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறங்களில் பெயின்ட் செய்து தயாரிப்பாக மாற்றுகிறோம். பிசினஸ் செய்வதைவிட வந்த கஸ்டமர்களை தக்கவைப்பதுதான் சவாலானது.  கஸ்டர்மர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்வது, குறைகளை ஏத்துக்கிட்டு வேறு நகைகள் கொடுப்பது, புது டிசைன்களை அப்டேட் செய்வது, பேக்கிங் போன்றவற்றில் அதிக கவனமா இருக்கணும். இப்போ இன்ஸ்டா, வாட்ஸ் அப், வெப்சைட்னு பல வழிகளில் இருந்து ஆர்டர்கள் வருது. ஏழு பெண்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுத்திருக்கேன். முதலீடு குறைவா இருந்தாலும்… முயற்சி பெரியதா இருந்தா போதும் சாதிக்கலாம் இதற்கு நான் ஒரு உதாரணம்,” என்று வெற்றிப் புன்னகையோடு விடைகொடுக்கிறார் ஓபு உஷா.

VBJ: ரூ.5,000 கோடி வருவாயை நோக்கி 125 ஆண்டுகள் பழைமையான நகைக் கடை நிறுவனம்!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட உம்மிடி பங்காரு ஜுவல்லரி நிறுவனத்துக்கு 125 ஆண்டுக்கால வரலாறு உள்ளது. 1900களில் குடியாத்தத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட உம்மிடி பங்காரு ஜுவல்லரி சென்னைக்கு வந்த பிறகு ... மேலும் பார்க்க

DRA: கலிபோர்னியாவின் ஸ்லேட் AI தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் டிஆர்ஏ நிறுவனம்!

வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும்,புதுமைகளை புகுத்துவதிலும் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான சென்னையைச் சேர்ந்த டிஆர்ஏ,கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்லேட் டெக்னாலஜிஸ் இ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் அடுத்த தேர்தல் எதையும் மாற்றாது; திரும்பி வந்துவிடுங்கள் இந்தியர்களே - ஶ்ரீதர் வேம்பு

அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை நாடு திரும்புமாறு இந்திய தொழிலதிபர் ஶ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது..."அமெரிக்காவில் வாழும்... மேலும் பார்க்க

90% பிசினஸ் ஓனர்கள் செய்யும் 'மிகப்பெரிய நிதித் தவறு!' - உங்கள் லாபம் எங்கே போகிறது?

பல தொழில்முனைவோர்கள் (Business Owners) செய்யும் மிகப்பெரிய நிதித் தவறு என்ன தெரியுமா? கம்பெனியின் பணத்தையும், தங்கள் சொந்தப் பணத்தையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்வதுதான். பிசினஸில் நல்ல லாபம் வரும்; அதை ... மேலும் பார்க்க

120 ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் வரை… மாமியார்–மருமகளின் பிசினஸ் வெற்றிக் கதை!

“ஒரே வீட்டுல மாமியாரும் மருமகளும் இருந்தா பிரச்சனை வரும்னு சொல்லுவாங்க.ஆனா, எங்களோட காம்போ வித்தியாசமானது. நாங்க சண்டை போட்டது இல்ல. பொறணி பேசுனது இல்ல. குறையும் சொன்னது இல்ல. என்ன கலர் ஹிட் ஆகும், எந... மேலும் பார்க்க