செய்திகள் :

`6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழுமா?'- அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு அமைச்சர் மரியவில்சனின் பதில் என்ன?

post image

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்ரீ வைகுண்டத்தில் நடந்த பொதுகூட்டத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் என உரையாற்றியிருக்கிறார்.

இது தொடர்பான கேள்வி தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர், ``கடந்த 15 முதல் 16 நாள்களாக முதலமைச்சர் அனைத்துத் துறை ரீதியிலான அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களை நேரில் சந்தித்துத் தீவிர ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

தினந்தோறும் சராசரியாக 6 முதல் 7 மணி நேரம் வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டு, பல முக்கிய ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அமைச்சரவை கூட்டமும் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. வரப்போகும் ஆகஸ்ட் முதல் வாரத்தில், தவெக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இந்த ஆட்சி ஆறு மாத காலத்தில் கவிழ்ந்துவிடும், அமைச்சர்கள் எல்லாம் எங்களிடம் வந்துவிடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பேசிவருவது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன் இன்னும் ரியாலிட்டிக்கு வரவேயில்ல்லை, அவருக்கு உண்மை என்னவென்று தெரியவில்லை. பாவம், அதனால்தான் அவர் இன்னும் மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல் இப்படிப் பேசி வருகிறார். இந்த உண்மை அவருக்கும் புரியவில்லை, அவர் தலைமைக்கும் புரியவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் அவர்கள் தலைவணங்க பழக வேண்டும்.

கடந்த 50 முதல் 55 நாள்களில் அரசு எடுத்து வரும் அனைத்துத் துறை சார்ந்த நடவடிக்கைகளையும் மக்கள் 100% வரவேற்கிறார்கள். மக்கள் அனைவரும் இந்த ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை துறை ரீதியாக நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் போது, எதிர்க்கட்சியினரும் இதனைச் சந்தோஷமாக வரவேற்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவை 'சாத்தான்' என்று விமர்சிக்கும் மொஜ்தபா; ஈரான் மக்களுக்கு விடுத்த கோரிக்கை என்ன?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இமாம் காமேனியும் உயிரிழந்தார்.இவர் அயோதுல்லா அலி காமேனிக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்பட்டவர் ஆவார்.இவருக்கான இரங்கல் க... மேலும் பார்க்க

'ரத்தத்திற்கு ரத்தம்' கேட்கும் ஈரான்; ட்ரம்ப் குடும்பம் மீது குறியா?

மிக பயங்கரமான போர்... தற்காலிக போர் நிறுத்தம்... அவ்வப்போது தாக்குதல்கள்... புரிந்துணர்வு ஒப்பந்தம்... போர் நிறுத்தம்... மீண்டும் போர் - இப்படியாக தொடர்கிறது ஈரான், அமெரிக்கா இடையிலான போர்.ஈரான் போர் ... மேலும் பார்க்க

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க

`என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரிந்திருந்தால்..!’ - தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

`அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் நியமிக்கிறார்கள்' என்று, த.வெ.க-வின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீத... மேலும் பார்க்க