செய்திகள் :

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; கரூரில் கைப்பற்றப்பட்ட அதிக பணம்! - நடந்தது என்ன?

post image

தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் அதிரடி சோதனை நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில், கணக்கில் வராத ரூ.82.10 லட்சம் சிக்கியள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், ரூ. 82,10,000 லஞ்ச பணத்தில் G-PAY மூலமாக மட்டுமே ரூ.68.32 லட்சம் லஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது. இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள 5 வட்டாட்சியர் அலுவலகங்களில் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ. 1,18,000 ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

raid

தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையில், கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிக பணம் கைப்பற்றப்பட்டதால், முதல் வரிசையில் கரூர் இடம் பெற்றுள்ளது. கடந்த ஜூலை 10-ம் தேதி கரூர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், 'தமிழகத்தில் எந்த அரசு அலுவலகங்களிலும் இப்பொழுது லஞ்சம் என்பதே இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் என்னிடம் கூறுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று பேசியிருந்தார். இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலங்களில் தமிழகம் முழுக்க நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட லஞ்ச பணத்தில் கரூர் முதலிடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: ரெளடி கருப்பு, போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கைது: நாட்டு வெடிகுண்டு பறிமுதல் - என்ன நடந்தது?

சென்னையில் உள்ள திருமுடிவாக்கத்தைச் சேர்ந்தவர் கருப்பு (எ) தமிழ் அழகு.இவர் மீது கொலை வழக்குகள் உள்பட 19 வழக்குகள் உள்ளன. இதனால், இவர் காவல்துறையின் 'A' பிரிவு பட்டியலில் இருக்கும் ரெளடி ஆவார்.கட்டப் ப... மேலும் பார்க்க

சேலம்: தலைக்கேறிய போதை; விபத்தை ஏற்படுத்திவிட்டு தீப்பொறி பறக்கச் சென்ற கார் - வைரலாகும் வீடியோ!

சேலம் மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. கஞ்சாவில் தொடங்கி போதை மாத்திரை, ஊசிகள் வரை பல்வேறு போதைப் பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமயாகி வருகின்றனர். போ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: கடன் தர மறுத்த மூதாட்டி கொலை... காதணியுடன் தப்பிய கொலையாளி கைது!

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் அம்மாள் (70). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வரும் ஆறுமுகம் அம்மாளை அவரது மூத்த மகள் செல்வம் என்பவர் பராமரித்து வருகிறார். கடந்த 16... மேலும் பார்க்க

அதிகரிக்கும் 'Boss Scam' மோசடி: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு செபி அவசர எச்சரிக்கை!

நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) மற்றும் மூத்த அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, ஊழியர்களிடம் பணம் பறிக்கும் 'பாஸ் ஸ்கேம்' மோசடிகள் இந்தியாவில் அண்மைக்காலமாக பெருமளவில் அதிகரித்து வருகி... மேலும் பார்க்க

ITR: '3000 பேரைப் பயன்படுத்தி ரூ.357 கோடி மோசடி'- வருமான வரித்துறையை மிரள வைத்த உத்தரப்பிரதேசப் பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண் திட்டமிட்டு நாடு தழுவிய அளவில் நடத்திய மிகப் பெரிய போலி வருமான வரி மோசடியை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. க... மேலும் பார்க்க

'டிராக்டர் வாடகைய கொடுக்கல' - கணவனைத் தண்டிக்க மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

மகாராஷ்டிராவில் இப்போது பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். உழவு பணிகளுக்கு அதிக அளவில் டிராக்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வாறு வாடகைக... மேலும் பார்க்க