செய்திகள் :

'ரத்தத்திற்கு ரத்தம்' கேட்கும் ஈரான்; ட்ரம்ப் குடும்பம் மீது குறியா?

post image

மிக பயங்கரமான போர்... தற்காலிக போர் நிறுத்தம்... அவ்வப்போது தாக்குதல்கள்... புரிந்துணர்வு ஒப்பந்தம்... போர் நிறுத்தம்... மீண்டும் போர் - இப்படியாக தொடர்கிறது ஈரான், அமெரிக்கா இடையிலான போர்.

ஈரான் போர் தொடக்கத்தின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

தற்போது அவரது மகன் மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மொஜ்தபா காமேனி
மொஜ்தபா காமேனி

அயோதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கிற்கு பின், மொஜ்தபா காமேனி, "இந்தப் பழிவாங்கல் நமது நாட்டின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். இது நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

மேலிடத்திலிருந்து கீழ்மட்டம் வரை யாருடைய பெயர்களெல்லாம் தெளிவாகத் தெரியுமோ, அந்தக் குற்றவாளிகள் அனைவரும் தங்களது படுக்கையில் நிம்மதியாக உயிரை விட வேண்டும் என்ற நிறைவேறாத ஆசையுடனேயே தங்களின் கல்லறைகளுக்குச் செல்வார்கள்.

இந்த நடவடிக்கை எனது தனிப்பட்ட இருப்பையோ அல்லது வேறு எந்தவொரு அதிகாரியின் பதவியையோ பொறுத்தது அல்ல என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார்

இந்த நிலையில், ஈரானின் தலைநகரான டெஹ்ரானின் மத்தியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதில் வெள்ளை மாளிகை எரிந்த பின்னணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், ட்ரம்பின் ஐந்து பிள்ளைகள் இவான்கா, டான் ஜூனியர், எரிக், டிஃபானி, பேரன் ஆகியோரின் புகைப்படங்கள் கல்லறையுடன் இடம்பெற்றுள்ளது.

அந்தப் பேனரில் பெர்ஷிய மொழியில், 'ரத்தத்திற்கு ரத்தம்' என்றும் எழுதப்பட்டுள்ளது.

டெல்லி அரசு மருத்துவமனையில் சட்டவிரோத காவலில் இருக்கும் சோனம் வாங்சுக்? - என்ன சொல்லப்படுகிறது?

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட 21 நாள்கள் ஆகிவிட்டன.அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்... மேலும் பார்க்க

அயோத்தி அறக்கட்டளை மோசடி: 'குற்றத்திற்கு பிறகு உங்கள் மொனம்.!' - மோடிக்கு கார்கே, ராகுல் கடிதம்

அயோத்தியில் ராமர் கோயில் அறக்கட்டளையில் முறைகேடு நடந்திருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு மாநிலங்களவை உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை தலைவர் ராகுல் காந்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.அந்தக் கட... மேலும் பார்க்க

அமெரிக்காவை 'சாத்தான்' என்று விமர்சிக்கும் மொஜ்தபா; ஈரான் மக்களுக்கு விடுத்த கோரிக்கை என்ன?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இமாம் காமேனியும் உயிரிழந்தார்.இவர் அயோதுல்லா அலி காமேனிக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்பட்டவர் ஆவார்.இவருக்கான இரங்கல் க... மேலும் பார்க்க

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க