செய்திகள் :

National Awards: "இயக்குநராக முதல் தேசிய விருது!" - 'ராயன்' தேசிய விருது பெற்றிருப்பது பற்றி தனுஷ்

post image

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் தனுஷின் 'ராயன்' படத்திற்குச் சிறந்த திரைப்பட விருதும், தனுஷுக்கு 'கேப்டன் மில்லர்' படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

'ராயன்'
'ராயன்'

இயக்குநராகத் தனது முதல் தேசிய விருதைப் பெறவிருக்கிறார் தனுஷ். தனக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்துச் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், "'ராயன்' திரைப்படத்திற்காகச் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதையும், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்காகச் ஸ்பெஷல் மென்ஷன் தேசிய விருதையும் பெற்றிருப்பதில் நான் உண்மையிலேயே பெருமகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறேன்.

மதிப்பிற்குரிய தேசியத் திரைப்பட விருதுகளின் நடுவர் குழுவிற்கும் மற்றும் தேர்வுக் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனது கலைப்பயணம் முழுவதும் தங்களது அசைக்க முடியாத ஆதரவை வழங்கி வரும் பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைத்தளத் தோழமைகளுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.

ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது மற்றும் ஒரு இயக்குநராக இது எனது முதல் தேசிய விருது ஆகும்.

எனது பலத்தின் தூண்களாக விளங்கும் எனது ரசிகர்கள் இல்லாமல் இது எதுவுமே சாத்தியமாகி இருக்காது. எனது இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்கான இந்த அங்கீகாரம் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. ஏனெனில், இன்று வரையிலான எனது சிறந்த நடிப்பு இதுதான் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.

நான் மிகவும் போற்றி மதிக்கும் ஒரு நடிப்புக்காக இந்தச் சிறப்புத் தகுதியைப் பெறுவது, இந்த கௌரவத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. மேலும், முதல் முறை என்பது எப்போதும் மறக்க முடியாதது.

'ராயன்' திரைப்படத்திற்காக ஒரு இயக்குநராக எனது முதல் தேசிய விருதை வென்றிருப்பது, நான் என்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு ஆசீர்வாதம்!" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

"ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தப்போ அதை நினைச்சு விலகியிருந்தால்..." - தேசிய விருது பற்றி சாச்சனா பேட்டி

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் பிரிவில் அனல் அரசுக்கும் ம... மேலும் பார்க்க

Anirudh: "இது முக்கியமான ஒரு மைல்கல்!" - அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து வேடன்

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் 'டிசி' படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அருண் மாதேஸ... மேலும் பார்க்க

"'ராயன்' படத்தை தனுஷ் அவ்வளவு அழகாக எடுத்திருந்தார்!" - தேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர்

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருட தேசிய விருதுக்கான ஜூரிகளில் ஒருவராக (Feature Films) நடன இயக்குநர் கலா பங்காற்றியிருக்கிறார். நேற்றைய தினம் தேசிய விருதுகள் அறிவித்தப் பிறகு ... மேலும் பார்க்க

National Awards: "விருது கிடைக்காத படங்கள் தகுதியற்றவை அல்ல!" - ஜூரி கணேஷ் பாபு பேட்டி

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருட தேசிய விருதுக்கான ஜூரியாக (Non-Feature Films) நடிகர் மற்றும் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு சென்றிருக்கிறார். தேசிய விருதுக்குப் படங்கள் எப்படித்... மேலும் பார்க்க

72-வது தேசிய விருதுகள்: சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்ற தனுஷின் 'ராயன்'

இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் வழக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு வெளி... மேலும் பார்க்க

அருள்வான் விமர்சனம்: மலைவாழ் சிறுமியின் கல்விக்கான போராட்டம்; அருள்நிதியின் டிராமா இலக்கை அடைகிறதா?

தேனி மலைக்கிராமத்தில் பெற்றோருடன் வளர்கிறார் காடர் இனச் சிறுமி குறிஞ்சி (பேபி கிருத்திகா). அப்பா கந்தன் (ஆரவ்) மலையில் தேன் எடுப்பது, அம்மா அமரவள்ளி (ரம்யா பாண்டியன்) காட்டில் சுள்ளி விறகு சேகரிப்பது ... மேலும் பார்க்க