செய்திகள் :

டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்; கோபத்தில் வெளியேறிய எதிர்க்கட்சிகள் - காரணம் 'திரிணாமுல்'

post image

நாளை (ஜூலை 20, 2026) முதல் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

இதையொட்டி இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்களின் சந்திப்பு நடந்தது.

ஆனால், ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றன.

இதற்கு மிக முக்கிய காரணம் - திரிணாமுல் காங்கிரஸ்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஏன்... என்ன விஷயம்?

கடந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை தழுவியதையடுத்து அந்தக் கட்சிக்குள் காட்சிகள் மாறி இருக்கின்றன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி மீது அதிருப்தியில் இருந்த 20 எம்.பிக்கள் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (NCPI) சேர்ந்தனர்.

இது மேற்கு வங்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகும். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இந்தக் கட்சியில் இணைந்த பின், இந்தக் கட்சி கவனம் பெற்றது.

இதெல்லாம் சரி... இன்று ஏன் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியேறினார்கள் என்று பார்த்தால், இன்றைய கூட்டத்திற்கு NCPI கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததே எதிர்க்கட்சிகளின் கோபத்திற்கு காரணம்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பேசுகையில், NCPI கட்சியில் 20 எம்.பிக்கள் இணைந்திருப்பது குறித்து மக்களவை சபாநாயகர் இன்னும் முடிவெடுக்காத போது, அந்தக் கட்சி எப்படி அழைக்கப்பட்டது என்று பொறுமுகிறார்கள்..!

`தாய் மாமன் சீர்; கொத்து புரோட்டா; அதிமுக, திமுக கூட்டணி; மிதுன் வருகை' - காயத்ரி ரகுராம் நேர்காணல்

அ.தி.மு.க-வுக்கு இது சோதனையான காலம். அக்கட்சியின் தலைவர்கள் கட்சியை விட்டு விலகி த.வெ.க-வில் அடைக்கலமாகி வருவதோடு, கட்சியின் பொதுச்செயலாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகளையும் வீசி வருகின்றனர். இந்த நிலைய... மேலும் பார்க்க

டெல்லி அரசு மருத்துவமனையில் சட்டவிரோத காவலில் இருக்கும் சோனம் வாங்சுக்? - என்ன சொல்லப்படுகிறது?

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட 21 நாள்கள் ஆகிவிட்டன.அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்... மேலும் பார்க்க

அயோத்தி அறக்கட்டளை மோசடி: 'குற்றத்திற்கு பிறகு உங்கள் மொனம்.!' - மோடிக்கு கார்கே, ராகுல் கடிதம்

அயோத்தியில் ராமர் கோயில் அறக்கட்டளையில் முறைகேடு நடந்திருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு மாநிலங்களவை உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை தலைவர் ராகுல் காந்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.அந்தக் கட... மேலும் பார்க்க

அமெரிக்காவை 'சாத்தான்' என்று விமர்சிக்கும் மொஜ்தபா; ஈரான் மக்களுக்கு விடுத்த கோரிக்கை என்ன?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இமாம் காமேனியும் உயிரிழந்தார்.இவர் அயோதுல்லா அலி காமேனிக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்பட்டவர் ஆவார்.இவருக்கான இரங்கல் க... மேலும் பார்க்க

'ரத்தத்திற்கு ரத்தம்' கேட்கும் ஈரான்; ட்ரம்ப் குடும்பம் மீது குறியா?

மிக பயங்கரமான போர்... தற்காலிக போர் நிறுத்தம்... அவ்வப்போது தாக்குதல்கள்... புரிந்துணர்வு ஒப்பந்தம்... போர் நிறுத்தம்... மீண்டும் போர் - இப்படியாக தொடர்கிறது ஈரான், அமெரிக்கா இடையிலான போர்.ஈரான் போர் ... மேலும் பார்க்க

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க