செய்திகள் :

65 பில்லியன் பேரல் எண்ணெய்... டிரம்பின் “உலகின் மிகப்பெரிய ஒப்பந்தம்” பின்னணி என்ன?

post image

அமெரிக்கா, வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பில் பெரும்பான்மைக் கட்டுப்பாட்டைப் பெறும் புதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை “உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்” என கூறியுள்ள நிலையில், அமெரிக்காவின் எரிசக்தித் தேவையையும் வெனிசுலாவின் எண்ணெய்த் துறையை மீட்டெடுப்பதையும் இலக்காகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, வெனிசுலாவின் 17 முக்கிய எண்ணெய் வயல்களை மேம்படுத்தத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அமெரிக்கா செயல்படவுள்ளது. 65 பில்லியன் பேரல் எண்ணெய் இருப்பின் மீது பெரும்பான்மைக் கட்டுப்பாடு கிடைக்கும் என்றும், இதற்காக அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் பயன்படுத்தப்படாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

அமெரிக்காவுக்கு ஏன் வெனிசுலா தேவை ?

இதற்கு முக்கிய காரணம் வெனிசுலாவின் எண்ணெய் வளம். அந்நாட்டில் சுமார் 303 பில்லியன் பேரல் நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இது உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவிகிதம். ஆனால் பல ஆண்டுகளாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, முதலீட்டுக் குறைவு மற்றும் பழுதடைந்த உள்கட்டமைப்பு காரணமாக, இவ்வளவு பெரிய வளம் இருந்தும் வெனிசுலாவின் உற்பத்தித் திறன் மிகவும் குறைந்துள்ளது.

அதோடு, மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட அழுத்தமும் அமெரிக்காவை மாற்று விநியோக ஆதாரங்களை நோக்கித் தள்ளியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் 'ஸ்ட்ராடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்' (Strategic Petroleum Reserve) கையிருப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், வெனிசுலா எண்ணெய் அமெரிக்காவுக்கு முக்கியமானதாகியுள்ளது.

டிரம்ப் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் பெட்ரோல் விலையைக் குறைக்க உதவும் என்றும் கூறியுள்ளார். மறுபுறம், வெனிசுலா தரப்பில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தனியார் முதலீடு கிடைக்கும் என்றும், அதன் எண்ணெய்த் துறையை மீண்டும் கட்டியெழுப்ப இது உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே “உலகின் மிகப்பெரிய Oil Deal” தானா?

65 பில்லியன் பேரல் என்ற எண்ணிக்கை மிகப்பெரியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், டிரம்ப் கூறும் “உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்” என்ற வர்ணனையை முழுமையாக மதிப்பிடுவதற்கு, ஒப்பந்தத்தின் சட்ட அமைப்பு, இதில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாடு நடைமுறையில் எவ்வாறு செயல்படும் போன்ற முக்கிய விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

டிரம்ப்

மேலும், வெனிசுலாவின் எண்ணெய் வயல்கள் பல ஆண்டுகளாகப் போதிய பராமரிப்பின்றி உள்ளதால், முதலீடு வந்த உடனேயே உற்பத்தி அதிகரித்துவிடும் என்றும் கூற முடியாது. உள்கட்டமைப்பைச் சீரமைப்பது முதல் அரசியல் மற்றும் சட்டரீதியான சவால்களைச் சமாளிப்பது வரை பல தடைகள் இந்த ஒப்பந்தத்தின் முன் உள்ளன.

அதனால், இது வெறும் 65 பில்லியன் பேரல் எண்ணெய் தொடர்பான வணிக ஒப்பந்தம் மட்டுமல்ல; அமெரிக்காவின் எரிசக்திப் பாதுகாப்பு, வெனிசுலாவின் பொருளாதார மீட்பு மற்றும் உலக எண்ணெய் அரசியலில் அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு ஆகியவற்றையும் தீர்மானிக்கக்கூடிய முக்கியமான வரலாற்று நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க