`இந்தியாவிலேயே அதிக விலை' டெல்லியில் ரூ.271 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய தொழில...
80-வது சுதந்திர தினம்... இந்த நன்னாளில் நீங்களும் இதைச் செய்தால், மிகப் பெரிய முன்னேற்றம் காணலாமே!
நமது நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை இன்னும் சில நாள்களில் கொண்டாடப் போகிறோம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாய்க் கிடந்து, அவர்கள் சொல்கிற மாதிரி நடந்துகொண்டிருந்த நாம், நம்மை ஆளும் உரிமையை நமக்கே பெற நூறு ஆண்டுகளுக்கு மேல் போராட வேண்டி இருந்தது.
பாடுபட்டு சுதந்திரம் பெற்றபிறகு கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என எல்லாத் துறைகளிலும் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது நம் நாடு. இந்தியர்களின் ஆயுள் காலம் ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது.
இந்தியப் பொருளாதாரம் 3.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ளதாக முன்னேற்றம் கண்டிருக்கிறது. விண்வெளியில் ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பம் உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது.
இப்படி எல்லா வகையிலும் இந்திய நாடும் இந்தியப் பொருளாதாரமும் முன்னேற்றம் கண்டுவரும் வேளையில், தனிமனிதர்களின் பொருளாதார வளர்ச்சியும் நன்கு உயர்ந்திருக்கிறது. இன்றைக்கு ஒரு சராசரி இந்தியனின் ஆண்டு வருமானம் 3000 அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்திருக்கிறது.
இதனால் இந்திய மக்களின் சேமிப்பும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்திய மக்கள் இந்திய வங்கிகளில் ரூ.250 லட்சம் கோடியை பிக்சட் டெபாசிட் கணக்கில் வைத்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வீடுகளையும், தங்கத்தையும் வாங்கிச் சேர்க்கிறார்கள்.

எனினும், இந்திய மக்கள் முதலீடு செய்து, பணவீக்கத்தைவிட அதிகமான வருமானத்தைச் சம்பாதிக்கிறார்களா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக, இந்திய மக்கள் மூலதனத்துக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும், அசல் பணத்துக்கு எந்த நஷ்டமும் வந்துவிடக்கூடாது என்றே நினைப்பார்கள்.
இதனால் அவர்களுக்குக் கிடைப்பது பணவீக்க விகிதம் அளவுக்கோ அல்லது அதைவிட கொஞ்சம் அதிகமாகவோதான் வருமானம் கிடைக்கிறது. பணவீக்க விகிதம் + வரி விகிதம் இந்த இரண்டையும் தாண்டி, 2% முதல் 4% வரை கூடுதலாக வருமானம் கிடைக்கும் முதலீடுகளில் இந்திய மக்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள்.
உதாரணமாக, பணவீக்க விகிதம் 6% - 7% எனில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நீண்ட காலத்தில் 12% வரை லாபம் கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் குறுகிய காலத்தில் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பார்த்து பயந்து அதில் முதலீடு செய்யாமலே இருக்கிறார்கள். இதனால் இனிவரும் காலத்தில் நல்ல லாபம் கிடைக்க இருக்கும் ஒரு வாய்ப்பினை இழக்கிறார்கள்.

இன்றைய தேதியில், ரியல் எஸ்டேட்டில் கிடைக்கும் லாபத்தைவிட, தங்கத்தில் கிடைக்கும் லாபத்தைவிட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் அதிகம். கடந்த 10 ஆண்டுகளில் லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப், ஃப்ளெக்ஸி கேப் என எந்த வகை ஃபண்ட்-ஆக இருந்தாலும் சரி, சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல்தான் வருமானம் தந்திருக்கிறது.
இந்த உண்மையைப் புரிந்துகொண்டவர்கள் இனியும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் தயங்கவே மாட்டார்கள்.
இந்திய நாடு தனது 80-வது சுதந்திரத் திருநாளைக் கொண்டாட இருக்கும் இந்த நன்னாளில் அனைவரும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் தொடங்கலாமே!

மியூச்சுவல் ஃபண்டில் SIP ஆரம்பிக்கணுமா?
மியூச்சுவல் ஃபண்டில் SIP இந்திமுதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!
சபரிநாதன் - 96294 78333
தங்கலட்சுமி 95007 77894
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!



















