செய்திகள் :

90 கி.மீ. தொலைவில் ஃபென்ஜால் புயல்!

post image

சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் ஃபென்ஜால் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் அம்மையம் தெரிவித்திருப்பதாவது, புதுச்சேரியில் இருந்து 80 கி.மீ., மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. ஃபென்ஜால் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

தாம்பரத்தில் மின்சார ரயில்கள் சேவை நிறுத்தம்

காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கிறது.

கரைக்கு அருகே வரும்போது புயலின் நகர்வு வேகம் குறையும். புயல் காரணமாக சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் நிலையில் பலத்த சூறைக்காற்றினால் கடல் கொந்தளிப்புடன் உள்ளது.

சென்னை அருகே கோவளத்தில் 65 கி.மீ.க்கு மேல் பலத்த காற்று வீசி வருகிறது. கோவளம் சுற்றுப்பகுதியில் வீசி வந்த பலத்த காற்றின் வேகம் 65 கி.மீ.க்கு மேல் அதிகரித்தது.

திண்டுக்கல்: மருத்துவமனையில் தீ விபத்து! 5-க்கும் மேற்பட்டோர் பலி!

திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று(டிச. 12) இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் தீ பரவியதால் மருத்துவமனையின் உள்ளே சிகிச்சை பெற்று வந்த நோயாளி... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்க... மேலும் பார்க்க

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதன்கிழமை (டிச.... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்தில் 33 மாவட்டங்களுக்கு மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!!

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் கொசஸ்தலையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித... மேலும் பார்க்க

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுக்குறையும்: பாலச்சந்திரன்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது வலுக்குறையும் என வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாலச்சந்திரன் கூறுகையில், நேற்று இலங்... மேலும் பார்க்க