செய்திகள் :

90 செஷன்கள்; தோள்பட்டை மூட்டு விலகல் - 'டிசி' படத்திற்காக லோகேஷ் கனகராஜின் டிரான்ஸ்பர்மேஷன்!

post image

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'டிசி' படம் வசூலை அள்ளி வருகிறது. வாமிகா கேபி, கிரிஷ் தயாள், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்த பாடல்களும், பின்னணி இசையும் பெரிதும் பாராட்டப்பட்டன. இந்தப் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடலளவில் தயாரான வீடியோவை செலிபிரிட்டி டிரெய்னர் சந்தீப், அவருடைய யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.

Trainer Sandeep
Trainer Sandeep

அந்தக் காணொளியில் சந்தீப், "இந்த உடலமைப்பின் டிரான்பர்மேஷனுக்காக 50 நாட்களில் 90 செஷன்கள் கடுமையாக உழைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

காலையிலும் மாலையிலும் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்வது சாதாரண விஷயம் இல்லை. தினமும் ஜிம்மில் முழுமையாக உடற்பயிற்சி செய்துவிட்டு, அதே எனர்ஜியோடு அடுத்த நாளுக்கும் தயாராவது ரொம்பவே கஷ்டமான விஷயம்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

'டிசி' படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சிரத்தை எடுத்துத் தயாரானது பற்றி இயக்குநர் அருண் மாதேஷ்வரன், "அவர் இந்தப் படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். நான் அவரிடம் கூறிய ஒரே விஷயம், 'நீங்கள் நீங்களாகவே இருங்கள்' என்பதுதான்.

லோகேஷிற்கு எப்போது கோபம் வரும், எப்போது சோகமாக உணர்வார் என்பதை மையமாக வைத்தே 'தேவதாஸ்' கதாபாத்திரத்தை லோகேஷ் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். அதில் அவர் தனது முழு உழைப்பையும் அளித்திருக்கிறார்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Arun Matheshwaran
Arun Matheshwaran

இப்படியான கடுமையான உடற்பயிற்சிக்கு மத்தியில், வேறொரு சமயத்தில் அவருக்கு எதிர்பாராத விதமாகத் தோள்பட்டை மூட்டு விலகல் ஏற்பட்டிருக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, இதற்கேற்ப அவர் உடற்பயிற்சி செய்ததாகவும் பயிற்சியாளர் சந்தீப் பகிர்ந்திருக்கிறார்.

'ஒலிம்பிக்ஸ் இறுதிப்போட்டிக்கு முன் உடைந்த துப்பாக்கி!' - உண்மையான சஞ்சய் விஸ்வநாதன் யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அந்தப் படத்தில் சூர்யா ஒரு துப்பாக்கிச்சுடும் வீரராக நடித்திருந்தார். படத்தில் அந்த க... மேலும் பார்க்க

செப்டம்பர் 1 முதல் புதுப் படங்கள் ரிலீஸ் இல்லை! - தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன?

திரையரங்கில் வெளியாகி 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் எனப் பல நாட்களாகத் திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், அப்படிச் செய்தால் படங்களின் வருவாய் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

What To Watch: 'மொத ராத்திரி டு ஜனநாயகன்' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்!

இந்த வாரத்தில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் சீரிஸ்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.மொத ராத்திரி - தமிழ்ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா நடி... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "கல்யாணத்தின்போது மோதிரம் வாங்கதான் காசு இருந்தது, அப்போது..." - சிவகார்த்திகேயன்

அக்ஷயா தங்க மாளிகையின் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நகைக் கடையின் விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இதன் திறப்பு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியிருக்கிறார... மேலும் பார்க்க

மொத ராத்திரி விமர்சனம்: கலகல காமெடி விருந்தும், மொய் வைக்கப்படும் மெசேஜும்! கல்யாணம் களைகட்டுகிறதா?

துபாயிலிருந்து திரும்பி வரும் மருதநாயகத்திற்கு (ரிஷிகாந்த்) திருமணம் செய்துகொள்வதில் துளியும் இஷ்டமில்லை. அவருக்குத் தெரியாமல் திருமண ஏற்பாடு செய்கின்றனர் அவருடைய குடும்பத்தினர். மற்றொரு பக்கம், காதலி... மேலும் பார்க்க

Ram & Leela Review: ஃபேன்டஸி ஐடியா ஓகே; ஆனால் காமெடியும் திரைக்கதையும் புதுமை சேர்க்கின்றனவா?

திருமணம் ஆகாத ஏக்கத்திலிருக்கும் ராம் என்கிற ரகு (ரியோ ராஜ்), குடும்ப உறுப்பினர்களுடன் முரண்டு பிடித்தல், நண்பன் ராமுடன் (பாலாஜி தியாகராஜன் தயாளன்) அரட்டை என வாழ்ந்து வருகிறார். தினசரி அலுவலகத்துக்கு ... மேலும் பார்க்க