செய்திகள் :

AI கண்காணிப்பு... லேசர் தாக்குதல்: கொசுக்களை விரட்ட அதிநவீன 'அயர்ன் டோம்'!

post image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கொசுக்களால் பரவும் 'வெஸ்ட் நைல் வைரஸ்' (West Nile Virus) பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு எதிராக அறிவியலாளர்கள் புதுமையானதொரு ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

பறக்கும் கொசுக்களை ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) மற்றும் லைடார் (LiDAR) தொழில்நுட்பம் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்து, லேசர் கதிர் வீச்சு மூலம் அவற்றைச் செயலிழக்கச் செய்யும் புதிய கருவி தற்போது ஆரம்பகட்ட சோதனையில் உள்ளது.

வழக்கமாக கொசுக்களைக் கட்டுப்படுத்த ரசாயன ஸ்பிரேக்கள், கொசுப் பொறிகள் மற்றும் லார்வா நாசினிகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றுக்கெல்லாம் மாற்றாக, குறிப்பிட்ட எல்லையில் பறக்கும் கொசுக்களை மட்டும் குறிபார்த்துத் தாக்கும் 'போட்டான் மேட்ரிக்ஸ்' (Photon Matrix) போன்ற AI கருவிகள் அறிமுகமாகியுள்ளன. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை வல்லுநர்கள் கொசுக்களுக்கான 'அயர்ன் டோம்' (Iron Dome) என்றே கருதுகின்றனர்.

கொசு

எப்படி வேலை செய்கிறது இந்தத் தொழில்நுட்பம்?

இந்தத் துல்லியத் தாக்குதலின் பின்னணியில் மிரட்டலான தொழில்நுட்பச் செயல்பாடுகள் உள்ளன. கருவியில் பொருத்தப்பட்டுள்ள லைடார் சென்சார், தனது கண்காணிப்பு எல்லைக்குள் பறக்கும் சிறிய பொருள்களின் இயக்கத்தை இடைவிடாமல் கண்காணிக்கும். பறப்பது கொசுதானா என்பதை அதிவேக கேமரா மற்றும் AI சிஸ்டம் நொடிப் பொழுதில் ஸ்கேன் செய்து உறுதி செய்யும். கொசு என உறுதி செய்யப்பட்டதும், அதன் இயக்கப் பாதையைக் கணித்து லேசர் கதிரைத் துல்லியமாகத் திருப்பும். லேசர் பட்டு கொசுவின் சிறகுப் பகுதி சேதமடைந்ததும், அது தொடர்ந்து பறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு வீழ்த்தப்படும்.

மனிதர்களோ அல்லது செல்லப்பிராணிகளோ லேசர் செல்லும் பாதையில் தற்செயலாக வந்தால், தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த 'mmWave radar' உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் உறுதியளிக்கின்றனர்.

இது கொசு ஒழிப்புக்கு முழுமையான தீர்வா?

தொழில்நுட்பம் சிலிர்க்க வைத்தாலும், இது தற்போதைய நிலையில் சில நடைமுறைச் சவால்களைச் சந்திக்கிறது. இந்தக் கருவியால் சுமார் 20 அடி அல்லது 6 மீட்டர் சுற்றளவிலான சிறிய பகுதியை மட்டுமே கண்காணிக்க முடியும். மேலும், இதன் தற்போதைய விலை சுமார் 1,000 டாலரை ஒட்டியுள்ளது. இதனால் சாதாரண பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இது இன்னும் மலிவான தீர்வாக மாறவில்லை.

AI Bubble

உயர் சக்தி கொண்ட லேசர் பயன்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள், வெளிச்சப் பிரதிபலிப்புகள் மற்றும் திறந்தவெளியில் இதன் செயல்திறன் குறித்து இன்னும் சில கேள்விகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, இந்தத் தொழில்நுட்பம் இப்போதைக்கு முழு நகரத்தையும் கொசுக்களிடம் இருந்து காப்பாற்றும் பிரமாண்டத் தீர்வாக அல்லாமல், குறிப்பிட்ட ஒரு சிறிய இடத்தைப் பாதுகாக்க உதவும் சாத்தியமான முன்னோட்டமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

ரசாயன நெடிகொண்ட ஸ்பிரேக்களுக்கு விடைகொடுத்துவிட்டு, AI மற்றும் லேசர் தொழில்நுட்பங்கள் கைகோக்கும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் எந்தளவுக்குச் செலவு குறைந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் உருவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆப்பிள் ரசிகர்களே! ₹3 லட்சத்தில் Foldable iPhone முதல் 18 Pro Max வரை! - என்ன ஸ்பெஷல்?

ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது. iPhone Duo என்ற தனது முதல் Foldable iPhone-ஐ ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 9 அன்று நடந்த ‘Surprise and Shine’ Apple E... மேலும் பார்க்க

AI: `மனித உயிர்களை கொன்றுவிடும்; தெரிந்தே.!' - அந்த்ரோபிக்கில் இருந்து வெளியேறியவர் சொன்ன `ஷாக்'

சிலிக்கான் வேலியில் தினமும் ஏதாவது ஒரு பரபரப்பான செய்தி வந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், சமீபத்தில் நடந்திருக்கும் ஒரு ராஜினாமா, டெக் உலகை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமூகத்தையுமே ஒரு நிமிடம் திரு... மேலும் பார்க்க

V2V: `இனி கார்கள் பேசிக்கொள்ளும்' - மத்திய அரசு கொண்டுவரப்போகும் புதிய தொழிற்நுட்பம்! | ஓர் அலசல்

இந்திய விபத்துகளும் உயிர் பலிகளும்!இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்தின் எண்ணிக்கையும், அதனால் பறிபோமும் உயிர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2025-ம் ஆண்டில், இந்தியாவில் நடந்த... மேலும் பார்க்க

TIME100: சென்னை IIT-ல் படித்தவர்... இன்று உலக AI ஆராய்ச்சியின் முக்கிய குரல்! Anima Anandkumar யார்?

சென்னை ஐஐடி-யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர், இன்று உலக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் மிக முக்கியக் குரலாகவும் கவனம் ஈர்க்கும் விஞ்ஞானிகளில் ஒருவராகவும் வலம் வருகிறார். கால்டெக் பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஸ்மார்ட்போன், இன்டர்நெட் இல்லையா? இனி கவலை வேண்டாம் - பட்டன் போனிலேயே UPI மூலம் பணம் அனுப்பலாம்!

ஸ்மார்ட்போன் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது என்ற நிலையை மாற்றகூடிய வகையில் இன்டர்நெட் வசதி இல்லாமலேயே பணம் அனுப்பவும், கடைகளில் பணம் செலுத்தவும் உதவும் ‘PhonePe UPI 123Pay’ என்ற புதிய சேவையை ... மேலும் பார்க்க

Roman Telescope: பிரபஞ்சத்தின் இருண்ட ரகசியங்களைத் தேடும் நாசாவின் $4 பில்லியன் ‘ரோமன்’ டெலஸ்கோப்!

பிரபஞ்சத்தின் விரிவாக்கம் மற்றும் கண்ணுக்குத் தெரியாத மர்மமான 'டார்க் மேட்டர்' (Dark Matter), 'டார்க் எனர்ஜி' (Dark Energy) ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நாசா (NASA) தயாரித்துள்ள 'நான்சி கிரேஸ் ரோமன் ஸ்... மேலும் பார்க்க