செய்திகள் :

Akshay Kumar: ஆன்லைன் கேமில் அக்‌ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாணப் படம் கேட்ட நபர் கைது

post image

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார்.

மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் பேசுகையில், ''எனது மகள் கண்ணுக்குத் தெரியாத நபருடன் ஆன்லைன் கேம் விளையாடியபோது எதிர்திசையில் இருந்த நபர் மெசேஜ் மூலம் உரையாடினார். அப்படி உரையாடிக்கொண்டிருக்கும் போது எங்கிருக்கிறாய், ஆணா, பெண்ணா என்று கேட்டுள்ளார். பெண் என்று எனது மகள் சொன்னவுடன் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

அக்ஷய் குமார்
அக்ஷய் குமார்

இது குறித்து எங்களது மகள் உடனே எனது மனைவியிடம் வந்து தெரிவித்தார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள வார விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தவேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் கேட்டுக்கொண்டார். அக்‌ஷய் குமாருக்கு 13 வயதில் ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். அக்‌ஷய் குமார் தெரிவித்த தகவல் குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் அக்‌ஷய் குமார் இக்குற்றச்சாட்டைத் தெரிவித்த நிலையில் தற்போது அக்‌ஷய்குமார் மகளிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறு ஏதாவது பெண்களிடம் இது போன்று நிர்வாண படங்களைக் கேட்டாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். டிஜிட்டல் கைது, பங்கு வர்த்தகம் எனப் பல்வேறு வழிகளில் ஆன்லைன் மோசடி நடந்து வருகிறது.

"இன்றும் கோயிலுக்குள் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது!" - 'பஞ்சாயத்' சீரிஸ் நடிகர் ஆதங்கம்

அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியான 'பஞ்சாயத்' வெப் சீரிஸில் நடித்துப் பிரபலமானவர் வினோத் சூர்யவன்ஷி. வினோத் சூர்யவன்ஷி - பஞ்சாயத் வெப் சீரிஸ்சமீபத்திய பேட்டி ஒன்றில், நிஜ வாழ்க்கையில் இன்றைய தேதிய... மேலும் பார்க்க

Bollywood: ``சுஷாந்த் மரணத்திற்கு பாலிவுட் மாஃபியாதான் காரணம்" - உடைத்துப் பேசும் நடிகை தனுஸ்ரீ!

பாலிவுட் திரையுலகில் நிலவும் அசாத்தியமான சூழல்கள் மற்றும் "பாலிவுட் மாஃபியா" (Bollywood Mafia) குறித்தும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் நடிகை ஜியா கான் ஆகியோரின் மரணங்களுக்குப் பின்னால் இருக்... மேலும் பார்க்க

மனைவி குறித்து பேசிய ரித்தேஷ் தேஷ்முக்; தேம்பி அழுத ஜெனிலியா - வைரலாகும் வீடியோ!

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராஜா சிவாஜி'. ரித்தேஷ் தேஷ்முக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 'ராஜா சிவாஜி' படத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Hansika: 'காஸ்டிங் கௌச்' குறித்த கேள்விக்கு நடிகை ஹன்சிகாவின் பதில் - விவாதிக்கும் நெட்டிசன்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த செய்தியைத் தொடர்ந்து மீண்டும் தலைப்புச் செய்திக... மேலும் பார்க்க

"சினிமா வேண்டாம் என்று ரூ.4500 சம்பளத்தில் வேலை செய்கிறார்" - மகன் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் நடிகை டிவிங்கிள் கண்ணா தம்பதியின் மகன் ஆரவ் தனது 15 வயதில் லண்டன் சென்று பேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு வந்தார். லண்டனில் படிக்கச் சென்றபோது தனக்கு தேவையான சாப்பாட... மேலும் பார்க்க

சுகேஷின் ரூ.200 கோடி மோசடி வழக்கு; அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விருப்பம்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் சிங் சிறையில் இருந்தபோது அவரை வெளியில் கொண்டு வருவதாக தொழிலதிபர் மனைவியிடம் கூறி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திர சேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிற... மேலும் பார்க்க