செய்திகள் :

Allu Arjun: "சேலை அணிந்து நடிக்க வேண்டும் என பயமாக இருந்தது; ஆனால்..." - அல்லு அர்ஜுன்

post image

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி பேன்-இந்தியா ஹிட் அடித்திருந்தது ‘புஷ்பா 2' திரைப்படம்.

அப்படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுனின் மார்க்கெட் மற்ற சினிமாக்களிலும் அதிகரித்திருக்கிறது.

புஷ்பா 2
புஷ்பா 2

இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் பெண் வேடமிட்டு அல்லு அர்ஜுன் ஜாதரா திருவிழாவில் நடனமாடுவார்.

தற்போது ஃபோர்ப்ஸ் இந்தியாவுக்குப் பேட்டியளித்த நடிகர் அல்லு அர்ஜுன், அந்த நடனம் தொடர்பாகவும், அதற்குத் தயாரானது பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.

அல்லு அர்ஜுன் பேசுகையில், "என்னுடைய திரைப் பயணத்திலேயே நான் செய்த கெத்தான விஷயம் என்னவென்றால், அது 'புஷ்பா 2' படத்தில் நான் பெண் வேடமிட்டு நடித்த காட்சிதான்.

தொடக்கத்தில் இந்த சண்டைக்காக வழக்கமான மாஸ் தோற்றத்தில் புகைப்படங்கள் எடுத்துப் பார்த்தோம். ஆனால், அது இயக்குநருக்குத் திருப்தியளிக்கவில்லை.

திருப்பதி பகுதியில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் ‘கங்கம்மா தல்லி ஜாதரா’ திருவிழாவில் ஆண்கள் பெண்ணாக வேடமிட்டு வழிபடும் வழக்கம் உண்டு.

அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்

அதை அடிப்படையாகக் கொண்டு, "நீங்கள் சேலை அணிந்து பெண் வேடத்தில் நடிக்க வேண்டும்" என்று இயக்குநர் என்னிடம் சொன்னார்.

தொடக்கத்தில் இந்த யோசனையைக் கேட்டதும் எனக்குப் பயமாக இருந்தது. சேலை அணிந்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்தின் மாஸ் மற்றும் கம்பீரம் குறையக் கூடாது என்பதில் நாங்கள் இருவரும் உறுதியாக இருந்தோம்.

அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக மாறியது" எனக் கூறியிருக்கிறார்.

``காதலித்தேன்... தோல்வியடைந்தேன்... மதுகுடித்தேன்..." - பர்சனல் பகிர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா 'Romanchakam' என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். செப்டம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்க... மேலும் பார்க்க

`நடிக்க வாய்ப்பளிப்பதாக பொய் வாக்குறுதி' - பாலியல் வன்கொடுமை புகாரில் இயக்குநர் பவன் சதினேனி கைது

திருமணம் செய்து கொள்வதாகவும், சினிமாவில் வாய்ப்பு தருவதாகவும் கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பவன் சதினேனியை கோல்கொண்டா காவல்துறையினர் கைது செய்த... மேலும் பார்க்க

Nepal Flood: "பயமாகவும், மனவேதனையாகவும் இருக்கிறது" - நடிகை ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உருக்கம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயின. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில்... மேலும் பார்க்க

"தெலுங்கு மக்கள் என்னை தமிழ் பொண்ணுன்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க, ஆனா..!"- ஸ்ரீ கௌரி ப்ரியா

'லவ்வர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கௌரி ப்ரியா. சமீபத்தில் தெலுங்கில் இவரது நடிப்பில் 'சென்னை லவ் ஸ்டோரி' படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஸ்ரீ கௌரி ப்ரியா 'Hi... மேலும் பார்க்க

Irumudi: "என் சினிமா போராட்டங்கள் 90-களில் சென்னைலதான் தொடங்கியது!" - சென்னையில் ரவி தேஜா

ரவி தேஜா நடித்திருக்கும் 'இருமுடி' படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த டோலிவுட் படத்தினை 'நின்னு கோரி', 'குஷி' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சிவா நிர்வானா இயக்கியிருக்கிறார். Irumudi -... மேலும் பார்க்க

Nagarjuna: ''மணிரத்னம் படத்தில் நடித்தது நான் எடுத்த துணிச்சலான முடிவு" - சொல்கிறார் நாகர்ஜூனா

நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ படத்தில் நடித்தது தனது திரையுலகப் பயணத்திலேயே மிகவும் துணிச்சலான முடிவு என்று தெரிவித்திருக்கிறார். மேலும், தனது மகன்களான நாக சைத... மேலும் பார்க்க