செய்திகள் :

Allu Arjun: "பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே காத்திருங்கள்" - சர்ச்சையான அல்லு அர்ஜுன் ஸ்பீச்

post image

ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன், இணையத்தில் நடக்கும் ரசிகர்கள் சண்டை மற்றும் ட்ரோல்கள் பற்றிப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், "எனது ரசிகர்கள் மற்றும் என்னைப் பிடிக்காதவர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், அவர்களை வெறுப்பதிலும், இணையத்தில் ட்ரோல் செய்வதிலும் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

Allu Arjun Fans Meet
Allu Arjun Fans Meet

அவர்களிடம் உங்கள் நேரத்தை 1% கூட வீணாக்கக் கூடாது. உங்களிடம் ரூ.100 இருந்தால், பிடிக்காத பொருளுக்குச் செலவழிப்பீர்களா? மாட்டீர்கள் அல்லவா! அதேபோல உங்கள் நேரத்தை உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்குச் செலவிடுங்கள்.

அதற்குப் பதிலாக உங்களுக்குப் பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே போய்க் காத்திருங்கள்" என்று நகைச்சுவையாகப் பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அல்லு அர்ஜுனுக்கு எதிராகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு பெண்ணின் வீட்டின் முன் போய் நிற்பது ஸ்டாகிங்.

இது தவறான செயலாகும். அதை ஒரு முன்னணி நடிகர் பொதுமேடையில் ஊக்குவிக்கும் வகையில் பேசியிருப்பது தவறானது மற்றும் பொறுப்பற்றது என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

Allu Arjun Fans Meet
Allu Arjun Fans Meet

கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஒரு நடிகர், பேசும்போது இன்னும் கவனமாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகின்றனர்.

"அன்பைப் பரப்புவதே என்னுடைய புரட்சி!" - விமர்சனங்களுக்கு பதிலடி தந்த 'சிக்மா' பட நடிகை ஃபரியா

டோலிவுட்டில் 'ஜதி ரத்னாலு' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபரியா அப்துல்லா. தற்போது இவர் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத்தில்... மேலும் பார்க்க

``நான் செல்ஃபி கூட எடுப்பதில்லை" - நடிகர் நாகர்ஜுனா ஓபன் டாக்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோ "சுரக்ஷா கா திரங்கா" சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்வில் நடிகர் நாகார்ஜுனா கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் உரைய... மேலும் பார்க்க

``சொத்துகளைப் பணிப்பெண்ணுக்கு கொடுத்துவிடுங்கள்" - மூத்த நடிகரின் ஆசையும் குடும்பத்தாரின் முடிவும்!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ரங்கநாத் (66) தற்கொலையைத் தொடர்ந்து அவரின் சொத்துகள் அனைத்தும் அவரின் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்படும் என அவரின் மகன் தெரிவித்திருக்கிறார். 1949-ல் சென்னையில் பிறந்த இ... மேலும் பார்க்க

Anupama: "என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" - செய்தியாளரின் கேள்விக்கு அனுபாமா பதில்

தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரனுக்கு 'கிரேஸி கல்யாணம்' படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அனுபமா பரமேஸ்வரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரு... மேலும் பார்க்க

ராஷ்மிகா மந்தனாவுக்குப் படுகாயம்; 6 வாரங்கள் ஓய்வெடுக்க சொன்ன மருத்துவர்கள்; என்ன நடந்தது?

நடிகை ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்திருக்கிறார். இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'மைசா' படத்த... மேலும் பார்க்க

Yash: ``எனக்கு பேய் படம்னா பயம், பார்க்கமாட்டேன்" - திரையில் மிரட்டும் ராக்கி பாய் கலகல டாக்!

KGF திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இவர், பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் நிதீஷ் திவாரி, மெகா பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டமான 'ராமாயணம்' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் யஷ், லங... மேலும் பார்க்க