செய்திகள் :

America: ``ஹார்முஸைக் கடக்கும் கப்பல்களுக்கு 20% வரி வேண்டும்'' - அதிபர் ட்ரம்ப் பதிவும் சர்ச்சையும்

post image

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் பாதுகாப்பு வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்குப் பதிலாக அந்த வழியாகச் செல்லும் கப்பல்களின் சரக்கு மதிப்பில் 20 சதவீதத்தை அமெரிக்காவிற்குக் கட்டணமாக வழங்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

கப்பல்
கப்பல்

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், "இனிமேல் அமெரிக்கா 'ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன்' என்று அழைக்கப்படும். ஆனால், நியாயமான முறையில் இந்த அபாயகரமான பகுதியில் பாதுகாப்பு வழங்குவதற்கான செலவுகளை ஈடுகட்ட, அதன் வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகளின் மீதும் 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்த அதிரடி முன்மொழிவு அதன் சட்டபூர்வத்தன்மை மற்றும் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்து உலகளவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பொதுவாக, கப்பல் நிறுவனங்கள் தங்களது சரக்குகளின் மதிப்பில் 2% முதல் 3% வரை மட்டுமே கட்டணமாகச் செலுத்துவது வழக்கம். ஆனால், ட்ரம்ப் கோரும் 20% கட்டணம் என்பது தற்போதைய நிலையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் என்பதால், எந்தவொரு நிறுவனத்தாலும் இதைச் செலுத்த முடியாது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், அமெரிக்கா பாதுகாப்பு வழங்கினாலும் கூட, அங்குள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு காப்பீட்டு நிறுவனங்கள் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க மறுக்கக்கூடும் என்பதால், இறுதி முடிவை காப்பீட்டு நிறுவனங்களே தீர்மானிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா - ட்ரம்ப் - ஈரான்
அமெரிக்கா - ட்ரம்ப் - ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தி என்பது சர்வதேச கடல் எல்லையாகும். சர்வதேச சட்டங்களின்படி, இங்கு அனைத்து நாடுகளின் கப்பல்களும் கட்டணமின்றி சுதந்திரமாகச் செல்ல உரிமை உண்டு. இதற்கு முன்பு ஈரான் இதேபோன்ற சேவை கட்டணங்களை விதிக்க முயன்றபோது, அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

சரக்கு மதிப்பின் அடிப்படையில் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கும் முறை வரலாற்றில் ஏற்கனவே நடந்துள்ளது. 1400-களின் தொடக்கம் முதல் 1800-களின் நடுப்பகுதி வரை டென்மார்க் நாடு தனது 'ஓரேசுண்ட்' கடல் வழியைக் கடக்கும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு அவற்றின் சரக்கு மதிப்பின் அடிப்படையில் கட்டணம் வசூலித்தது.

ஆனால், வேடிக்கை என்னவென்றால், அன்று அமெரிக்கா தலையிட்டுத்தான் டென்மார்க்கின் அந்தக் கட்டண முறையை ரத்து செய்ய வைத்தது. இன்று அதே அமெரிக்கா, பாதுகாப்பு என்ற பெயரில் அதேபோன்ற கட்டணத்தை வசூலிக்கத் துடிப்பது வரலாற்று முரண் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பழனி கோயில் சொத்துகள் முறைகேடாக பத்திரப் பதிவு; சார் பதிவாளர் சஸ்பெண்ட்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் அடிவார பகுதியில் கோயிலுக்கு சொந்தமாக 100 கோடி மதிப்பிலான1.40 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலம் 1888 ஆம் ஆண்டு தண்டாயுதபாணி சுவாமி திருமடத்திற்கு பர... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதிக்கு ஜாக்பாட்; முதல் கட்டமே ரூ.1,013 கோடி - முழு விவரம் தெரியுமா?

தமிழக முதல்வரும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவின் போது தொகுதி குறித்து ஆய்வு செய்ததன் அடிப்படையில், பெரம்பூர் தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அ... மேலும் பார்க்க

``அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன" - மாணிக்கம் தாக்கூர்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் தொடங்கி, விருதுநகர், குடியாத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் காங்கிரஸ் கட்சியால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த விழாக்களின் ஒரு ... மேலும் பார்க்க

“விஜய்யைப் பார்க்கப்போனதே கொலைக் குற்றமாகிவிடுமா என்ன?” - கரூர் எம்.பி ஜோதிமணி காட்டம்

“கரூரில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் வழங்கிய பணி ஆணை என்பது, வழக்கு விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும்தானே?”“கரூரில் நிகழ்ந்த அந்தக் கொடூர, துயர் நிகழ்வில் பலியானவர்கள் சமூகத்தின் அடித்தட்... மேலும் பார்க்க

விஜய் அரசின் முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் - ஒப்புதல் அளிக்க கூடுகிறது தமிழக அமைச்சரவை!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்... மேலும் பார்க்க