செய்திகள் :

Anupama: "என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" - செய்தியாளரின் கேள்விக்கு அனுபாமா பதில்

post image

தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரனுக்கு 'கிரேஸி கல்யாணம்' படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.

அனுபமா பரமேஸ்வரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவில், "யாரோ ஒருவரின் அனுமதிக்கும், தலைப்பிற்கும் காத்திருக்கத் தேவையில்லை.

என் அமைதியைக் கண்டடைய சில முடிவுகளைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. இனிப் பயமில்லை, என்னுடைய குரலை நான் தேர்ந்தெடுக்கிறேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு பற்றி 'கிரேஸி கல்யாணம்' படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வில் அனுபாமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதில் தந்தவர், "அது என்னுடைய சோஷியல் மீடியா கணக்கு. அதில் என்ன பதிவிட வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன்.

நான் என் கவலையைக் கொட்டுவதற்காக அப்படிப் பதிவிடவில்லை. ஒரு பெண் தன் வாழ்க்கையில் கடந்து செல்லும் ஒரு மாற்றத்தைப் பற்றித்தான் நான் பேசினேன். அதைச் செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

Anupama Parameswaran | அனுபமா பரமேஸ்வரன்
Anupama Parameswaran | அனுபமா பரமேஸ்வரன்

என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அது எங்களது இன்ஸ்டாகிராம் கணக்கு, எங்களுக்குப் பிடித்ததை நாங்கள் பதிவிடுகிறோம்.

கடந்த ஓராண்டு காலம் எனக்குச் சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது நான் மிகவும் நல்ல மனநிலையில் இருக்கிறேன்" எனப் பேசியிருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனாவுக்குப் படுகாயம்; 6 வாரங்கள் ஓய்வெடுக்க சொன்ன மருத்துவர்கள்; என்ன நடந்தது?

நடிகை ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்திருக்கிறார். இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'மைசா' படத்த... மேலும் பார்க்க

Yash: ``எனக்கு பேய் படம்னா பயம், பார்க்கமாட்டேன்" - திரையில் மிரட்டும் ராக்கி பாய் கலகல டாக்!

KGF திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இவர், பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் நிதீஷ் திவாரி, மெகா பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டமான 'ராமாயணம்' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் யஷ், லங... மேலும் பார்க்க

Allu Arjun: "பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே காத்திருங்கள்" - சர்ச்சையான அல்லு அர்ஜுன் ஸ்பீச்

ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன், இணையத்தில் நடக்கும் ரசிகர்கள் சண்டை மற்றும் ட்ரோல்கள் பற்றிப் பேசியிருக்கிறார். அப்போது அவர், "எனது ரசிகர்கள் மற்றும் எ... மேலும் பார்க்க

கோவையில் நடிகர் ராம் சரணுக்கு நடந்த அறுவை சிகிச்சை; டிஸ்சார்ஜ் எப்போது?

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த, 'பெத்தி' என்ற திரைப்படப் படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில... மேலும் பார்க்க

"'பகவந்த் கேசரி' பார்த்துட்டு விஜய் சார் என்கிட்ட பேசிய விஷயம்..." - 'பகவந்த் கேசரி' இயக்குநர்!

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்த... மேலும் பார்க்க

'ஆங்கிலம் தெரியாமல் இருந்தபோது என்னை கேலி செய்தனர்; ஆனால்..!'- கசப்பான சம்பவத்தை பகிர்ந்த பாக்யஸ்ரீ

நடிகர் அகில் அக்கினேனி நடித்திருக்கும் 'லெனின்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் 'காந்தா' படத்தின் மூலம் அனைவர... மேலும் பார்க்க