செய்திகள் :

Assam: சிக்கலில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா; முன் ஜாமீன் மறுக்கும் நீதிமன்றம்; என்ன பிரச்னை?

post image

இந்த மாதத் தொடக்கத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீதும், அவரின் மனைவி ரினிகி புயன் சர்மா மீதும் காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் பவன் கெரா, ``இந்தியா தவிர ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் ரிகினி புயன் சர்மா பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். அவருக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளதா? இந்தியச் சட்டப்படி ஒருவர் இரண்டு நாடுகளின் குடியுரிமை அல்லது பாஸ்போர்ட்டை வைத்திருக்க முடியாது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா? மேலும், ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் துபாய் மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது சொத்துக்களை மறைத்துவிட்டார்." எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். அதற்கான ஆதரங்களையும் வழங்கியிருந்தார்.

அதேநேரம் ஹிமந்த பிஸ்வா ஷர்மா தரப்பில், `இந்த ஆதாரங்கள் அனைத்தும் AI மூலம் உருவாக்கப்பட்ட போலியானவை' எனக் குறிப்பிட்டு கவுகாத்தி காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் பவன் கெரா முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் `வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல வாய்ப்பிருப்பதாகவும், அவர் காட்டிய ஆவணங்களின் உண்மைத்தன்மையை அறிய போலீஸ் விசாரணை தேவை' எனக் கூறி முன்ஜாமீன் வழங்க மறுத்தது.

அதைத் தொடர்ந்து பவன்கேரா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பவன் கேரா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ``பவன் கெரா ஒன்றும் கொடூரமான குற்றவாளி அல்ல. அவதூறு வழக்குகளில் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?" என கேள்வி எழுப்பினார்.

ஹிமந்த பிஸ்வா சர்மா

மத்திய அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, ``பவன் கெரா காட்டிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களின் பின்னணி குறித்து விசாரிக்க அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம்." என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கின் முடிவு, பவன் கெரா கைது செய்யப்படுவாரா அல்லது அவருக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்குமா என்பதைத் தீர்மானிக்கும்.

தமிழ்நாடு `டு' மேற்கு வங்கம்; எக்ஸிட் போல் குறித்து மல்லிகார்ஜுன கார்கே சொன்னது என்ன?

புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த 9ஆம் தேதி ஒரே கட்டமாகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாகவும் நடந்துமுடிந்தது.இரண்டு கட்டங்க... மேலும் பார்க்க

`பிரசவ சிகிச்சை அலட்சியம்; நெஞ்சில் அமர்ந்துகொண்டு காலால் அழுத்தம் கொடுத்தனர்'- இளைஞர் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீப்லதா என்ற பெண் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு பிரசவ வலி வந்த பிறகும் டாக்டர்கள் அவருக்குப் பிரசவம் பார்க்காமல் 9 மணி ந... மேலும் பார்க்க

`திமுக வரக்கூடாது' - கலக்கத்தில் தவாக டு எதிர்ப்பு காட்டிய நிர்வாகி; அச்சத்தில் அமைச்சர்! | கழுகார்

கலக்கத்தில் த.வா.க"தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது!"தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என, அ.தி.மு.க-வினரைவிட அதிகமாக வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்தான் விரும்புகிறார்களாம். கடைசி நேரத்தில் ... மேலும் பார்க்க

’கட்சி போடுகிற பிச்சை' - துரை வைகோவின் வார்த்தையால் கூண்டோடு வெளியேறிய ஈரோடு நிர்வாகிகள்

ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறை பேரூராட்சியின் துணைத் தலைவரும் மதிமுகவின் மாநில இளைஞரணி துணைத் தலைவருமான லோ.சோமசுந்தரம் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார்.’பதவி, பொறுப்பு என்பதெல்லாம் கட்சி ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் ட்ரெண்ட்: `கையில் வேலுடன் தரிசனம் செய்த தி.மு.க அமைச்சர்கள்!'

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். தற்போது பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு, த... மேலும் பார்க்க

'எங்கும் ட்ரம்ப்; எதிலும் ட்ரம்ப்' அமெரிக்க டாலர், தங்க காசு, பாஸ்போர்ட் - அனைத்திலும் ட்ரம்ப்?

அமெரிக்கா முதல் உலக நாடுகள் வரை அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைக்கிறார் போலும். வரி.. போர் என அவ்வப்போது உலக நாடுகளில் தாக்கம் ஏற்படுத்தும் ட்ரம்ப், உள்நா... மேலும் பார்க்க