செய்திகள் :

AVM Saravanan: "தாணு மாதிரியானவங்க தான் தாக்குப்பிடிச்சு படம் எடுக்குறாங்கன்னு சொன்னாரு"- வைகோ

post image

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

"குடும்பப்பாங்கான படங்களுக்கு ஏவிஎம் நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்தது. அப்படி எடுத்த படங்களிலேயே புகழைக் குவித்த படம் 'அன்பே வா'.

ஆங்கில படம் ஒன்றின் உட்கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களும், சரோஜா தேவி அவர்களும், நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களும் அந்தப்படத்தில் நடித்திருப்பார்கள்.

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ
ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ

இதில் ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 'அன்பே வா' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.

வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் 7,8 இடங்களில் சண்டை காட்சிகள் வரும். வாள்வீச்சு, கத்திச் சண்டை என எல்லாம் டூப் போடாமல் அவரே நடித்திருப்பார்.

ஆனால் இப்போதெல்லாம் சண்டைக் காட்சிகள் அப்படி இருப்பதில்லை. கொடூரமாகக் கொலை செய்கிறார்கள்.

துண்டு துண்டாக வெட்டி எறிகிறார்கள். எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திலும் ரத்தம் சிந்திய காட்சியே இருக்காது.

ஒரே ஒரு படத்தை தவிர அது 'மதுரை வீரன்' படம். அவரது படத்தில் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும்.

அந்தவகையில் ஏவிஎம் ஸ்டுடியோ தயாரிப்பில் வெளியான 'அன்பே வா' படத்தில் சண்டைக் காட்சிகள் அற்புதமாக இருக்கும். இசை ரசிக்கும்படியாக இருக்கும்.

ஏ.வி.எம் சரவணன்
ஏ.வி.எம் சரவணன்

ஏ.வி.எம் குடும்பத்தில் நான் சரவணனிடம் தான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். "கலைப்புலி தாணு மாதிரியான ஆட்கள்தான் தாக்குப்பிடித்து படம் எடுக்கிறார்கள்.

நாங்கள் இப்போது அதிகமாகப் படம் எடுப்பதில்லை" என்று என்னிடம் சரவணன் சொன்னார்.

நூறாண்டு வாழ வேண்டும் என்று விரும்பினார். அவரை மரணம் என்ற கழுகு கொத்திக்கொண்டு போய்விட்டது. ஏவிஎம் புகழ் கலைத்துறை இருக்கும் வரை நிலைத்திருக்கும்" என்று பேசியிருக்கிறார்.

AVM: ``என் கஷ்ட காலங்களில்" - ஏவிஎம் சரவணன் குறித்து கலங்கிய ரஜினி

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் ஏராளமான படங்களைத் தயாரித... மேலும் பார்க்க

AVM Saravanan: " 66 ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார்"- இயக்குநர் வசந்த்

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அவருக்குப் பிறகு பொறுப்பெடுத்து நிர்வகித்தவர் ஏ.வி.எம் சரவணன்.ஏராளமான வெற்றிப் ... மேலும் பார்க்க

AVM: ``முரட்டுக்காளை வந்தபோது சரவணன் சாருக்கு கடிதம் எழுதினேன்" - நினைவுகளைப் பகிரும் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் ஏராளமான படங்களை தயாரித்த... மேலும் பார்க்க

AVM Saravanan: ``ஏவிஎம் ஸ்டுடியோஸ் எனக்கு பயிற்சி மையமா இருந்துருக்கு.!"- விஷால் இரங்கல்

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அவருக்கு பிறகு பொறுப்பு எடுத்து நிர்வகித்தவர் ஏ.வி.எம் சரவணன். ஏராளமான வெற்றி ப... மேலும் பார்க்க

AVM: `குடும்பப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்' - ஏவிஎம் சரவணன் காலமானார்

ஏ.வி.எம் சரவணன் காலமானார்ஏ.வி.எம் சரவணன் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி மெய்யப்ப செட்டியரால் தொடங்கப... மேலும் பார்க்க