தீப்தி சர்மா நிகழ்த்திய சம்பவம்; பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி!
Battle ஜாக்கெட் முதல் Bandit ஜாக்கெட் வரை - 'நோ' ஆங்கிலேய கால டிரெஸ் கோட்; மாறும் இந்திய ராணுவ உடை!
ஆங்கிலேயர்கள் வெளியேறி கிட்டத்தட்ட 79 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இந்தியாவில் இன்னும் பல நடைமுறைகள் காலனியத்துவதின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன.
அதில் ஒன்று, 'இந்திய ராணுவ வீரர்களின் சீருடை'.
அதை தற்போது மாற்றுவதற்கான கையேடு 'இந்திய ராணுவத்தின் புதிய சீருடை விதிமுறைகள் - 2026'-ஐ வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதில் கூறப்பட்டுள்ளவை...
ஆங்கிலேயர் காலத்து சின்னங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் வார்த்தைகளைப் பயன்பாட்டிலிருந்து நீக்கிவிட்டு, ராணுவ பாரம்பரியத்தை இந்தியாவின் இறையாண்மை மற்றும் தேசிய பண்பாட்டிற்கு ஏற்ப மாற்றுவதை இந்தப் புதிய விதிகள் நோக்கம்.




ராணுவ அதிகாரிகள் இனி தங்களின் முறையான சிவில் உடையின் ஒரு பகுதியாக, இந்தியாவின் பாரம்பரிய 'பண்டி ஜாக்கெட்'டை (Bandi Jacket) அணியலாம். இது இந்தியப் கலாச்சார அடையாளத்தை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
'பேட்டில் ஜாக்கெட்' (Battle Jacket) என்கிற புதிய குளிர்கால சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பேட்டில் ஜாக்கெட், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஜெர்சி அடிப்படையிலான குளிர்கால சீருடையை (Dress 3A) வரும் ஜூன் 2029-க்குள் படிப்படியாக முழுமையாக மாற்றியமைப்படும்.
சீருடையில் இருக்கும் போது...
விசித்திரமான அலங்காரம், அனுமதியற்ற தாடி, வெளியில் தெரியும்படி மின்னணு சாதனங்களை வைத்திருப்பது , பச்சை குத்திக்கொள்வது, உடலில் துளையிடுவது, சீருடையில் இருக்கும்போது அழகுச் சாதன ஒப்பனைகள் செய்வது ஆகியவற்றிற்கு புதிய கையேட்டின் படி, தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கூட்டங்கள், மத வழிபாட்டுக் கூட்டங்கள், போராட்டக் களங்கள், திருமண விழாக்கள், தனியார் விருந்துகள், முறையான அனுமதியின்றி பணப் பலன்களுக்காக ஊடகங்களில் தோன்றுவது போன்ற இடங்களில் சீருடை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.!














