செய்திகள் :

BB Tamil 10 : ஜாய் கிறிசில்டா டு பிரபல மேக்அப் ஆர்ட்டிஸ்ட் - BB வீட்டுக்கு இவர்களெல்லாம் போறாங்களா?

post image

விஜய் டிவியில் செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 10.

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடந்ததில்லை. கொஞ்சம் முன்னோ பின்னோ நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதென தீர்மானித்திருக்கிறார்கள்.

அதேபோல் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களில் இருந்து சிலரை அனுப்பலாமெனத் தீர்மானித்து 'பிக்பாஸ் தி காமன் மேன்' என்றொரு நிகழ்ச்சியையும் நடத்தி அதில் தேர்வாகும் ஓரிருவரை பிக்பாஸ் போட்டியாளராக அனுப்புவதென்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த சீசனில் போட்டியாளர்களாக செல்கிறவர்களென சிலரது பெயர்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

தற்போது மேலும் சிலர் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன.

யார் யார் எனப் பார்க்கலாமா?

ஷபானா - ஆர்யன்

தனி ஆளா ஜோடியா?

'செம்பருத்தி' சீரியலில் நடித்த சபானா மற்றும் அவரது கணவர் ஆர்யன் இருவரது பெயர்களூமே அடிபடுகின்றன. ஜோடியாகச் செல்வதில் இரண்டு பேருக்குமே தயக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே யாராவது ஒருவர் இதில் உறுதியாகச் செல்லலாமென எதிர்பார்க்கப் படுகிறது. ஆர்யனுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம்.

ஈரமான ரோஜாவே | Eeramana Rojave

அப்போ ஹீரோயின் இப்ப ஹீரோ!

ஈரமான ரோஜாவே தொடரில் நடித்த வினோத் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறூகிறார்கள். இந்த தொடரில் வினோத்துக்கு ஜோடியாக நடித்த பவித்ரா பிக்பாஸ் எட்டாவது சீசனில் ஒரு போட்டியாளராகச் சென்றது நினைவிருக்கலாம்.

Madhampatty Rangaraj - Joy Crizdildaa
Madhampatty Rangaraj - Joy Crizdildaa

சோஷியல் மீடியாவில் கடந்த சில மாதங்களாகவே ட்ரெண்டிங்கில் இருந்தவர் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா. தன் குழந்தைக்கு அப்பா ரங்கராஜ்தான் என நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்ட ஜாய் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்லவிருப்பதாக நம்பிக்கையான சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் தவிர இன்ஸ்டாகிராமில் பிரலபலமான மேக் ஓவர் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதாவும் பிக்பாஸ் செல்லத் தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது. மேக் - அப் ஏரியாவிலிருந்து இன்னொரு போட்டியாளரும் கலந்து கொள்ளலாமென்கிறார்கள். இவர்கள் தவிர்த்து முன்னரே சொன்ன முன்னாள் கிரிக்கெட்டர் முரளி விஜய்-யும் செல்கிறார் என்கிறார்கள்.

BB Tamil 10: "டிவிக்கு வந்த இத்தன வருஷத்துல இப்படி மோசமான அனுபவத்தைச் சந்திச்சதே இல்ல"- ஷப்னம் அம்மா

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.பத்தாவது ஆண்டு ஸ்பெஷல் என்பதால் எந்தச் சீசனிலும் இல்லாத புதுமையாக இந்தச் சீசனில் 14 போட்டியாளர்கள், நிக... மேலும் பார்க்க

BB Tamil 10 : எஸ்கேப் ஆன போட்டியாளர்; வைல்டு கார்டு என்ட்ரிக்கு ஓகே?! - கடைசி நாளில் நடந்ததென்ன?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.மேலும் எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில், பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க

BB 10: "எனக்கு பயம் இல்ல, பெரிய நடிகராக இருந்தால் கூட.!"- காமன்மேன் முனியம்மாள் ஷேரிங் |Exclusive

பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ̀பிக்ப... மேலும் பார்க்க

Bigg Boss Tamil Season 10: முதல் முறையாக மேடையிலேயே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்; அதிரடி தொடக்கம்!

பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக் பா... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 10: "என்னோட அந்தப் பக்கத்தை மக்கள் பெருசா பார்த்ததில்ல" - குமரன் பேட்டி | Exclusive

விஜய் டிவியில் ̀பிக்பாஸ் தமிழ் சீசன் 10' கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பும் பொறுப்பை முதன்முறையாக பார்வையாளர்களிடம் கொடுத்துள்ளனர். என்ட்ரியாகு... மேலும் பார்க்க