``ஸ்மிருதி மந்தனா திருமண தடை; நான் அவரை காப்பாற்றி உள்ளேன்'' - சாட்டிங் செய்த ப...
BB Tamil 9: `அவர் அப்படித்தான் பேசுவார்' பிரஜின் விவகாரத்தில் முன்கூட்டியே கணித்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே போன திவ்யா, பிரஜின், சாண்ட்ரா ஆகிய மூவருடனும் கார சாரமாக விவாதித்தது நினைவிருக்கலாம்.
இந்த சீசன் தொடங்கியது முதலே போட்டியாளர்கள் அந்த வீட்டில் நடந்து கொள்ளும் விதம் வெளியில் உள்ளவர்களால் விமர்சிக்கப்பட்டே வந்த நிலையில், சனிக்கிழமை ஷூட்டிங்கில் வெடித்து விட்டார் விசே.

`பிக் பாஸ் ஏதாவது சொன்ன கேக்க மாட்டேங்குறீங்க', `டாஸ்க் கொடுத்தா சின்சியரா அதைச் செய்ய மாட்டேங்குறீங்க' என்கிற ரீதியில் அனைவரையும் வறுத்தெடுத்த அவர், பிரஜினிடம் வந்தபோது, இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் போலவே ஆகிவிட்டது உரையாடல்.
பிரஜினுக்கும் விஜய் சேதுபதிக்கும் நல்ல அறிமுகம் உண்டு. இருவரும் `மச்சான்' என அழைத்துக் கொள்ளுமளவுக்கு பரஸ்பரம் அறிமுகமானவர்கள். சினிமா தொடர்பாக எந்த உதவி கேட்டாலும் இப்போதும் செய்து வருகிறார் விசே.
பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்லும்போதே சேர்ந்து நடித்த சீரியல் குறித்து சீசனின் முதல் எபிசோடிலேயே இருவருமே பேசியதைப் பார்த்திருப்பீர்கள்.
இந்தப் பின்னணியில் தற்போது இருவருக்குமிடையில் நடந்த வாக்குவாதம் குறித்து பிரஜின் சான்ட்ரா இருவருக்கும் நெருக்கமான சிலரிடம் பேசினோம்.
''பெண் சீரியல் ஒளிபரப்பானப்ப பிரஜின் அதுல ஹீரோ. விஜய் சேதுபதி சப்போர்ட்டிங் கேரக்டர். ஆனாலும் ரெண்டு பேருமே ஒரே காலக்கட்டத்துல சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டிருந்த வகையில ரெண்டு பேருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது.

பிறகு ரெண்டு பேருமே சீரியலை விட்டு விலகி சினிமாவை நோக்கிக் கிளம்பினாங்க. அந்த முயற்சி விஜய் சேதுபதிக்குக் கைகொடுக்க அவர் சப்போர்ட்டிங் கேரக்டர்கள்ல நடிச்சு ஹீரோ ஆகி இப்ப சினிமாவுல தனக்கென ஒரு இடத்தைப் பிடிச்சிட்டார். ஆனா பிரஜினுக்கு சினிமா ரூட் இப்ப வரைக்கும் சரியா அமையலனுதான் சொல்லணும். தமிழ்ல வாய்ப்பு அமையலன்னு சான்ட்ராவுடைய ஊரான கேரளா போய் மலையாள சினிமாவுலயும் கொஞ்ச நாள் முயற்சி பண்ணினார். ஆனா அங்கயும் க்ளிக் ஆகல. பிறகு இங்க வந்தவர் மீண்டும் சினிமா, சீரியல்னு மாத்தி மாத்தி பண்ணிட்டிருக்கார். முழுக்க டிவியில மட்டும் கவனம் செலுத்தினாலே தொடர்ந்து வாய்ப்பு அமையும். அப்படியும் பண்ண மாட்டேங்குறார்.
பெரிய இடைவெளிக்குப் பிறகு சீரியல் பக்கம் வந்தப்பகூட வாய்ப்பு தந்த விஜய் டிவியிடம் கோவிச்சுக்கிட்டு போனதெல்லாம்கூட நடந்தது.
இத்தனையையும் தாண்டி இந்த பிக் பாஸ் சீசனுக்கு அவரை அனுப்பற முடிவெடுத்த சேனலை பாராட்டியே ஆகணும்'' என்கிறவர்களிடம் நிகழ்ச்சியில் அவர் விளையாடும் விதம் குறித்துக் கேட்டோம்.
''அடிப்படையில இவர் கொஞ்சம் கோபக்காரர். தான் நினைக்கறது சரின்னு அவருக்குத் தோணுச்சுன்னா யார் சொன்னாலும் அதை மாத்திக்கமாட்டார். கணவன் மனைவியுமா அவர் நிகழ்ச்சிக்குத் தேர்வானபோதே அவர்கிட்ட 'இது சரிப்பட்டு வருமா'னு கேட்டிருக்காங்க.
ஷோவுல ரெண்டு பேரும் தனித்தனியா கேம் ஆடலைங்கிறதுதான் பிக் பாஸின் புகார். ஆனா அதை மறுக்கிறார் பிரஜின்.

தவிர, சக போட்டியாளர்கள்கிட்ட 'சேதுகிட்ட சொல்லி வெளியில அனுப்பவா'ன்னு இவர் கேட்டதை பிக் பாஸே ரசிக்கவில்லை எனத் தெரிகிறது என்கிறார்கள் இவர்கள்.
பி.பா தொடர்புடைய சிலரிடம் பேசியபோது,, 'சனிக்கிழமை ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே விஜய் சேதுபதியிடம் பிரஜின் பேசியது குறித்து பிக் பாஸ் டீம் பேசியிருக்கிறது. 'அவன் அப்படித்தான் பேசுவான்';; என்ற விசே அதற்கு பெரிதாக ரியாக்ஷன் காட்ட வில்லையாம். ஆனால் நீங்க எச்சரிச்சா நல்லா இருக்கும்' எனக் கேட்கவே, 'அப்பவும் கூட அவன் மாத்திக்க மாட்டான்' எனக் கூறியதாகத் தெரிகிறது.
ஆனாலும் போட்டியாளர்கள் யாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த செல்வாக்கும் சேனலிடமோ பிக் பாஸிடமோ இல்லை என்பதை உணர்த்த வேண்டுமென்றே கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்' என்கிறார்கள்.











.jpeg)







