Stephen: "ஒரு Shortfilm-ல ஆரம்பிச்ச கதை தான் Stephen" - Gomathi Shankar & Mithun...
BB Tamil 9: அவர் முன்னால் நின்னு நடத்த வேண்டிய கல்யாணம் ஆனா... - அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி
விஜய் டிவியில் பாதி நாட்களைக் கடந்துவிட்டது பிக் பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட 20 பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம்.
இவர்களில் நந்தினி மட்டும் பிக் பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.
பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை கடந்த வாரம் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார்.

முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.
இந்தச் சூழலில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் சென்ற அமித் பார்கவின் சொந்த தம்பியின் திருமணம் நேற்று நடந்தது.
அமித்தின் தம்பிக்கும் போபாலைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று பெண் வீட்டார் முறைப்படி போபாலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
மணமகன் வீட்டார் சார்பான சடங்குகள் நாளையும் நாளை மறுதினமும் பெங்களூருவில் நடைபெற இருக்கிறதாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் சொந்தத் தம்பியின் திருமணத்தில் அமித் கலந்து கொள்ளாத சூழலில் அவரது மனைவி ஸ்ரீ ரஞ்சனியிடம் பேசினோம்.
‘’பிக் பாஸ் வாய்ப்பு வந்தப்பவே இந்தத் திருமணம் உறுதியாகியிருந்தது. சினிமா டிவி மாதிரியான மீடியாவுல வாய்ப்பு வர்ற போது தவற விடறது நல்லதில்லங்கிறதால அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டார். ஆனாலும் நேத்து மட்டுமில்ல இன்னும் ரெண்டு மூணு நாள் அவர் மனசு இந்தக் கல்யாணத்துலதான் இருக்கும்னு நினைக்கிறேன்.
வீட்டுல எங்க எல்லாருக்குமே கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் பொறுத்துக்கிட்டோம்.

அந்த வீட்டுலயும் சரி வெளியிலயும் சரி இதுவரை அவருக்கு கெட்ட பெயர் பெருசா வரலைன்னுதான் நினைக்கிறோம். இப்படியே விளையாண்டா போதும்னு நினைக்கிறோம்.
பிக் பாஸில் கலந்து கொள்ளும் எல்லாருக்குமே டைட்டில் வாங்கணும்கிற ஆசை இருக்கதான் செய்யும். இவரைப் பொறுத்தவரை நூறு நாளும் அந்த வீட்டுல இருப்பார்னு நம்பறேன். மத்ததெல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் கடவுள் கையிலதான் இருக்கு’’ என்கிறார் இவர்.



















