செய்திகள் :

BB Tamil 9: "இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது" - விஜே பார்வதி, கம்ருதீனைச் சாடிய விஜய் சேதுபதி

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது.

மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது.

BB Tamil 9
BB Tamil 9

அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும்.

அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர்.

குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார்.

வலுக்கும் எதிர்ப்புகள்

இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, "நம்ம என்ன வேணாலும் பண்ணலாம். நம்மகிட்டதான் வாய் இருக்கே... எதுவா இருந்தாலும் பேசி சமாளிச்சுக்கலாம், நியாயப்படுத்திக்கலாம்னு நினைக்கிற எண்ணம் இருக்கு பாருங்க... இது யாருக்கு நடந்தாலும் சரி, எங்க நடந்தாலும் சரி பொறுத்துக்க முடியாது. பொறுத்துக்கவும் மாட்டேன்" என்று பார்வதியையும், கம்ருதீனையும் சாடியிருக்கிறார்.

Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? - ஒர்க்அவுட் ஆகுமா `எழுத்து' ஜோதிடம்?

நிறைவுப் பகுதியை எட்டி விட்டது பிக்பாஸ் சீசன் 9.இதற்கு முந்தைய சீசன்களில் கடைசி வார எவிக்ஷனின் போது ஆறு போட்டியாளர்கள் உள்ளே இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவர் 'மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறுவார்கள... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 98: `சாண்ட்ராவை புரிஞ்சுக்கவே முடியலை' திவ்யாவின் வருத்தம்; ஒரு குறும்படம்! ஹைலைட்ஸ்

எப்பவோ நிகழ்ந்திருக்க வேண்டிய எவிக்ஷன். இப்பவாவது நிகழ்ந்தது. ‘இவருக்கு கோப்பையை கொடுத்து விடுவார்களோ?’ என்கிற பீதியும் சந்தேகமும் ஓடிக் கொண்டிருந்த நிலையில் சாண்ட்ராவின் எவிக்ஷன் நிகழ்ந்தது, தமிழ் சீ... மேலும் பார்க்க

BB Tamil 9: "இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன்" - பிக் பாஸில் துஷார்; நெகிழ்ந்த அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 98 நாள்களைக் கடந்துவிட்டது.பைனலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷன... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: பணத்தேவை, மனச்சோர்வு - வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது ஏன்?

பணப்பெட்டி டாஸ்க் மூலம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கானா வினோத் வெளியேறியதால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.இந்த சீசனில் டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளவர் என எதிர்பா... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மன் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்

“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார்.பிக் ப... மேலும் பார்க்க

BB Tamil 9: பணப்பெட்டி டாஸ்க்; "இதுதான் இந்த சீசனின் கடைசி குறும்படம்" - விஜய் சேதுபதி அதிரடி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 97 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா எவிக்ஷனில் வெளியேறியிருந்தார்.BB Tamil 9இதனைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க