வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க
BB Tamil 9: "உன்னை எமோஷனலா டவுன் பண்ண பாக்குறாங்க" - எச்சரிக்கும் விக்ரம் அம்மா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.
அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா, ஆகியோரின் குடும்பத்தினர் வந்துவிட்டனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் விக்ரம் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். விக்ரம் அம்மாவிடம், "என்ன வேலை வாங்கிட்டே இருக்கான் ஆண்டி" என பார்வதி சொல்கிறார்.
"நீ வாக்குவாதம் பண்ற அந்த 2 நிமிஷத்துல அந்த வேலைய பண்ணிரலாமே பாரு. உன்னை மாதிரி ஒரு அக்கா விக்ரமுக்கு இருந்திருந்தா இன்னும் கொஞ்சம் விளையாடிருப்பான்" என விக்ரம் அம்மா சொல்லி சிரிக்கிறார்.

"என்னால எப்படியெல்லாம் 100 சதவிகிதம் தரமுடியுமோ அப்படிலாம் நான் தந்திட்டுதான் இருக்கேன்" என விக்ரம் சொல்ல, "நீ அழுகிறதுதான் பார்க்க கஷ்டமா இருக்கு" என விக்ரம் அப்பா எமோஷனலாகிறார். "உன்னை எமோஷனலா டவுன் பண்ண பாக்குறாங்க" என விக்ரம் அம்மா சொல்கிறார்.


















