செய்திகள் :

BB Tamil 9: "எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல"- பிரஜினிடம் பேசிய ஆரி

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரொமோவில் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருக்கிறார்.

நடிகர் ஆர்யன் - கம்ருதீன்
நடிகர் ஆர்யன் - கம்ருதீன்

அந்தவகையில் "அடுத்த 50 நாளுக்கான வைப் ( Vibe) இந்த வீட்டுல உச்சத்துல இருக்கணும். அதுக்கு நடுவுல FJ இருக்கணும்" FJ விடம் அவரது நண்பர் பேசுகிறார்.

கம்ருதீனிடம் "இந்த கேம்ம நீ தனியா விளையாண்ட அப்படின்னா அந்த பினாலே ஸ்டேஜ்ல நிக்கிறதுக்கான அவ்வளவு தகுதியும் உன் கிட்ட இருக்கு" என நடிகர் ஆர்யன் சொல்கிறார்.

தொடர்ந்து " மத்தவங்களை ஜெயிக்க வைக்க வந்த சப்போர்ட்டிங் கேரக்ட்டர் நீயா? இல்ல, டைட்டில் ஜெயிக்க போற மெயின் கேரக்ட்டர் நீயா?" என கனி திருவிடம் அவரது சகோதரியும் நடிகையுமான விஜயலட்சுமி கேட்கிறார்.

விஜயலட்சுமி - கனி திரு
விஜயலட்சுமி - கனி திரு

அதேபோல "எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல. இந்த ஷோல உன்னோட எக்ஸ்பீரியன்ஸை காட்டாம உன் வாழ்க்கையில நீ எங்க காட்ட போற" என நடிகர் ஆரி பிரஜினிடம் சொல்கிறார்.

BB Tamil 9: "பிரஜினை கேம்முக்கு யூஸ் பண்ணிருக்காங்கன்னு எனக்கு தோணுது"- திவ்யா குறித்து சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்... மேலும் பார்க்க

BB Tamil 9: மவுன்ட் ரோடு விளம்பரம், முக்கோண லவ் ட்ராக்.. எஃப்.ஜே. எவிக்ஷனில் தப்புவ‌து எப்படி?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விஜய் டிவியில் 60 நாட்களைக் கடந்துவிட்டது. இன்னும் நான்கு வாரங்கள்தான் மிச்சமிருக்கிற சூழலில் அந்த வீட்டுக்குள் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.முன்னதாக இந்த சீசன் இரு... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 70: சண்டை சான்ட்ரா; மகுடி ஊதும் பாரு - இந்த `குட் காம்பினேஷன்' தொடருமா?

‘டாஸ்குகளை நீங்கதான் யோசிச்சு சுவாரசியமா செய்யணும். யாரும் சொல்லித் தர முடியாது’ என்கிறார் ஹோஸ்ட். ஆனால் ஒரு டாஸ்க் முடிந்த பிறகு ‘ஏன் அப்படி செஞ்சீங்க?’ என்று வார இறுதியில் கேட்டு குடாய்கிறார்.கோர்ட்... மேலும் பார்க்க

BB Tamil 9: இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றவர்கள் யார் யார்? - வெளியான புரொமோ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறியிருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்திருக்கிறது. BB Tami... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 69: ‘கேக்கல... சத்தமா... கேக்கல.. ‘ - பிகில் விஜய்யாக மாறிய விசே

மறுபடியும் அதேதான் ‘இவரே பாம் வைப்பாராம். அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற மாதிரிதான் பிக் பாஸ் ஷோ போய்க்கொண்டிருக்கிறது. பாரு, கம்ருதீன் போன்ற அடாவடி போட்டியாளர்களின் சேட்டைகளை, அதனால் ஏற்படும் சண்ட... மேலும் பார்க்க