செய்திகள் :

BB Tamil 9: "தப்பு பண்ணிட்டேன்.!"- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் விழுந்த கம்ருதீன்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது.

மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது.

BB Tamil 9
BB Tamil 9

கார் டாஸ்க் சர்ச்சை

அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும்.

அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர்.

குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார்.

வலுக்கும் எதிர்ப்புகள்

இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

BB Tamil 9
BB Tamil 9

ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதுபதி

இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், " கம்ருதீனுக்கு பலமுறை சொல்லிருக்கேன். நீங்க இப்படி பேசுறீங்களே அது பார்க்கிறவுங்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா? உங்க அக்கா இதை பார்த்தாங்கன்னா தம்பி நீ நல்லா பண்ண அப்படின்னு சொல்லுவாங்களா?...

நீ ஒரு பொண்ண கோவத்துல எட்டி உதைச்சதை பார்த்து நான் ரசிச்சேன் அப்படின்னு பாரு அம்மா பாராட்டுவாங்க. உங்க அக்கா பாராட்டுவாங்க. ரொம்ப சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும்..." என்று சொல்லி இருவருக்கும் ரெட் கார்ட்டை எடுத்து காண்பித்தார் விஜய் சேதுபதி.

காலில் விழுந்த கம்ருதீன்

இந்நிலையில் தற்போது மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. "உனக்கு எத்தனை டைம் சொன்னே... பாரு உன்னை ட்ரிகர் பண்ணிவிடுறதுனாலத் தான் நீ வார்த்தைய தேவையில்லாம பயன்படுத்துற, உனக்கு கரியர் முக்கியம் பார்த்துக்கோ'ன்னு சொல்லிருக்கேன்" என திவ்யா கம்ருதீனிடம் சொல்கிறார்.

BB Tamil 9
BB Tamil 9

அதற்கு பார்வதி "தயவு செஞ்சு நீ பேசாத" என சொல்ல திவ்யா நீ முதல்ல வெளியே போ" என்று கோபப்படுகிறார்.

"உன்னைய இந்தளவுக்கு நிக்க வச்சதே பார்வதி தான்" என வினோத் கம்ருதீனிடம் சொல்கிறார்.

இதனைத்தொடர்ந்து "நான் பண்ணது ரொம்ப பெரிய தவறு சாண்ட்ரா, வாழ்க்கையில மறக்க முடியாத அளவுக்கு தப்பு பண்ணிட்டேன்" என பார்வதி கேட்க கம்ருதீன் சாண்ட்ரா காலில் விழுகிறார்.

BB TAMIL 9 DAY 102: தனிப்பட்ட தாக்குதலில் இறங்கிய திவாகர்; என்டர்டெயினர் வினோத்! பிக் பாஸ் ஹைலைட்ஸ்

இந்த எபிசோடில் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லை.வினோத்தும், பிரவீன்ராஜூம் இணைந்து திவாகரை வம்பிழுத்ததும், அவர் மிகையாக அவதூறுகளை வாரி இறைத்ததும், கொண்டாட்டத்தின் கரும்புள்ளிகள்.BB TAMIL ... மேலும் பார்க்க

BB TAMIL 9 DAY 101: இம்சை செய்யும் திவாகர்; அடம் பிடிக்கும் ரம்யா! - 101வது நாளில் நடந்தது என்ன?

பாரு இல்லாத இடத்தை திவாகர் நிரப்ப முயற்சிக்கிறார் போல. ஒருவழியாக கடைசியில் வீடு விக்ரமன் படமாக மாறி ‘லாலாலா’ பாட ஆரம்பிக்கும் நேரத்தில் திவாகரால் மீண்டும் சண்டை. இவர் ஏன் மறுபடியும் உள்ளே வந்தார் என்ற... மேலும் பார்க்க

திருமண வாழ்க்கையில் நுழைந்தார் பிக்பாஸ் ஜூலி! - இன்று நிக்காஹ், நாளை சர்ச்சில் வரவேற்பு!

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலியின் திருமணம் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. நீண்ட நாள்களாக காதலித்து வந்த முகமது என்பவரைக் கரம் பிடித்தார்.சில தினங்களுக... மேலும் பார்க்க

BB Tamil 9: "எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க" - வினோத்திடம் அழும் அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.டாப்... மேலும் பார்க்க