What to watch: `நாயகன்', `ஆரோமலே', `கிஸ்' - இந்த வாரம் வெளியாகியுள்ள சீரிஸ் மற்ற...
BB Tamil 9: "பர்சனல் விஷயத்தையும் நீங்க பேசாதீங்க"- மோதிக்கொள்ளும் FJ, அமித் பார்கவ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருந்தனர்.
வழக்கம்போல இந்த டாஸ்கிலும் போட்டியாளர்களுக்குள் கலவரம் வெடித்தது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் FJ, அமித் பார்கவ் இருவரும் மோதிக்கொள்கின்றனர்.
"என்ன ஜோக் காமிச்சுட்டு இருக்கிங்களா, நல்ல வேஷம்லாம் போட்டு இங்க யாரும் ஒன்னும் பண்ணப்போறது இல்ல.

உங்களுக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தா? கெஸ்ட்டிடம் சொல்லி இருப்பீங்க" என FJ கத்த, "நான் மறந்துட்டேன். பர்சனல் விஷயத்தை இங்க பேசாதீங்கன்னு" அமித் பார்கவ் சொல்கிறார்.
"அப்போ என்னுடைய பர்சனல் விஷயத்தையும் நீங்க பேசாதீங்க" என FJ கோபப்படுகிறார்.




















