Jana Nayagan: அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட பொருள்களுக்கு தடை - நெறிமுறைகளை ...
BB Tamil 9: "வினோத் மேல பாசம் வச்சுருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும்; ஆனா, நீ.!"- காட்டமான அமித்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 79 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.
அந்தவகையில் நேற்று (டிச. 23) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

இன்று வெளியான முதல் இரண்டு புரொமோக்களில் அமித் குடும்பத்தில் இருந்தும், திவ்யா குடும்பத்தில் இருந்தும் வந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் அமித், வினோத் இருவரும் சமையல் விஷயத்திற்காக வாக்குவாதம் செய்துகொள்கிறார்கள்.
"ரொம்ப ஓவரா பண்ணாத அமித். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணேனா?" என வினோத் காட்டமாக அமித்திடம் சண்டை போடுகிறார்.
" நீ ரொம்ப ஓவரா பண்ணாத. என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டுதான் இருக்க. என்கிட்ட நாக்கு மடிச்சு பேசுற.

உன் மேல எவ்வளவு பாசம் வச்சுருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா நான் உன்னை தப்பா பேசுற மாதிரி நீ வெளிப்படுத்துற" என்று அமித் வினோத்திடம் வாக்குவாதம் செய்கிறார்.





















