செய்திகள் :

BB Tamil 9: "FJ என் ப்ரெண்ட்னு சொல்லி ஒண்ணு பண்ற அது நல்லா இல்ல" - ஹவுஸ் மேட்ஸின் மொட்டை கடுதாசிகள்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார்.

BB Tamil 9
BB Tamil 9

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது.

வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம், பார்வதி அழுகை என வழக்கம் போல இந்த டாஸ்க்கிலும் பிக் பாஸ் வீடு கலவரமானது.

வார இறுதி எபிசோடிற்காக நேற்று (நவ.29) என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, வீட்டில் நடந்த சண்டைகள் குறித்தும், வீட்டு தலையாகச் சரியாகச் செயல்படாத FJ குறித்தும் விசாரித்தார்.

BB Tamil 9
BB Tamil 9

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் ஹவுஸ் மேட்ஸ் எழுதிய மொட்டை கடுதாசியை விஜய் சேதுபதி வாசிக்கச் சொல்கிறார்.

"பாரு நீங்க ஏன் இப்படி ஒரு கேவலமான மைண்ட் செட்ல இருக்கீங்க", "கம்மு நீ குழந்தைத் தனமாக இருப்பதைப் பார்க்கும்போது இன்னும் இன்னும் ரசிக்கத்தான் தோணுது", "கானா வினோத்தை நாமினேட் பண்ணுங்க, 3 வாரமா நாமினேஷன்-ல இருந்து தப்பிச்சிட்டு இருக்காரு", "'FJ என் ப்ரெண்ட்'னு சொல்லி ஒண்ணு பண்ற அது நல்லா இல்ல" என ஹவுஸ் மேட்ஸ் அந்த மொட்டை கடுதாசியை வாசிக்கின்றனர்.

BB Tamil 9: "என்னை மன்னிச்சிடு"- ஆதிரையிடம் மன்னிப்பு கேட்ட FJ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க

`உங்க தம்பி கமல்சார்கூட இருக்காரே பரவால்லயா'ன்னு ஆனந்த் கேட்டார் - தவெகவில் சேர்ந்த நடிகர் ஜீவா ரவி

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் களத்தில் புதுப்புது என்ட்ரிகள், இடப் பெயர்வுகள் என நாள்தோறும் சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை.அதிமுகவிலிருந்த கே ஏ செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இண... மேலும் பார்க்க

BB Tamil 9: "நான் இந்த வீட்டில என்ன வேணாலும் பண்ணுவேன்; அதை கேட்க FJ யாரு?"- காட்டமான பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 65: கம்மு - பாரு ரொமான்ஸ்; ஒட்டுமொத்த வீட்டுக்கும் தண்டனை; ரணகளமான கோர்ட் டாஸ்க்

திவாகர் வெளியேற்றத்துக்கு வினோத் காரணமா? கோர்ட்டில் வந்த முதல் கேஸ் இது. வினோத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. என்றாலும் திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத்தும் ஒருவகையில் காரணமாக இருந்தார்.எத்தனை முறை... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னையும், FJ-வையும் ஏன் சேர்த்து வச்சு பேசுறீங்க"- வினோத்திடம் சண்டைப்போடும் ஆதிரை

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 64 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க