TVK: "மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால்..." - திமுக அரசு மீது விமர்...
BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.
மேலும் ஹவுஸ் மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார்.
பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில் கம்ருதீனுக்கும், திவ்யா கணேஷிற்கும் சண்டை நடக்கிறது.
"ஒருத்தவுங்களை பேச விட்டு எல்லாரும் வேடிக்கை தானே பார்த்துட்டு இருந்தீங்க" என திவ்யா சொல்ல "தேவை இல்லாம பேசாத. நீ எல்லாம் என் கூட பேசவே கூடாது கிளம்பு" என கம்ருதீன் கோபப்படுகிறார்.
"மரியாதையா பேசு கம்ருதீன்" என திவ்யா கத்துகிறார். கம்ருதீனை சமாதானம் செய்யும் பார்வதியை 'நீ பண்றது தப்பு' என காட்டமாக பேசுகிறார் திவ்யா.

















