செய்திகள் :

Bigg Boss 10: முன்னாள் போட்டியாளரின் பாய் ஃப்ரண்ட், நடிகையின் மகள்.! - கலந்து கொள்கிறவர்கள் இவர்களா?

post image

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 10.

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடந்ததில்லை. கொஞ்சம் முன்னோ பின்னோ நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதென தீர்மானித்திருக்கிறார்கள்.

அதேபோல் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களில் இருந்து சிலரை அனுப்பலாமெனத் தீர்மானித்து 'பிக்பாஸ் தி காமன் மேன்' என்றொரு நிகழ்ச்சியையும் நடத்தி அதில் தேர்வாகும் ஓரிருவரை பிக்பாஸ் போட்டியாளராக அனுப்புவதென்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.

சரி, தமிழ் பிக்பாஸ் பத்தாவது சீசனில் போட்டியாளர்களாக யாரெல்லாம் செல்லவிருக்கிறார்கள்?

விசாரணையில் இறங்கினோம்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

''சினிமா, சின்னத்திரை, மாடலிங், யூ டியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியா என பல ஏரியாக்களில் இருந்தும் பலரிடம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பேசியிருக்கிறார்கள்.

மூன்றுகட்டப் பரிசீலனையின் முடிவில் தேர்வாகிறவர்களிடம் மட்டும் மேற்கொண்டு அக்ரிமென்ட் முதலான விஷயங்களைப் பேசுகிறார்கள்' என்கின்றனர் நிகழ்ச்சியுடன் தொடர்பிலிருக்கும் சிலர்.

நமக்கு கிடைத்த தகவல் படி, பிக்பாஸ் 10க்காக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அப்ரோச் செய்த லிஸ்டில் உள்ளவர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.

தற்போது ஒளிபரப்பாகி வருகிற பிக்பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சிக்கு நைட்டியில் வந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பெண் போட்டியாளரைப் பார்த்திருப்பீர்கள். 'நைட்டி நாரமாலான உடைதானே, என்கிற இவர், 'நைட்டில வரச் சொன்னதும் அவ‌ங்கதான், பிறகு என்னை ரிஜெக்ட் செய்ததும் அவங்கதான்' என தற்போது புலம்பி வருகிறார். பெண்களுக்கு நைட்டி என்றால் பல ஆண்களுக்கு கம்ஃபர்ட்டான வீட்டு உடை லுங்கி.

இந்த லுங்கி என்னும் பெயர் மூலமே சமூக வலைதளங்களில் பிரபலமான 'லுங்கி பாய்ஸ்' ராஜ் பிரியன் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்லலாமென்கிற பேச்சு அடிபடுகிறது.

தன்னுடைய நகைச்சுவை வீடியோக்களில் லுங்கி கட்டிக்கொண்டு இவர் செய்யும் அட்ராசிட்டிகளுக்கு யூ டியூபில் அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கும் லுங்கிகளை பேக் செய்திருக்கிறாரா என்பது அடுத்த சில தினங்களில் தெரிய வரும்.

shabnam

இந்த தடவையாச்சும் வர்றீயாம்மா?

சீரியல்களில் நகைச்சுவை நடிகையாக அறியப்படுபவர் ஷப்னம். தெய்வ மகள், மாரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் இவரை முந்தைய சில சீசன்களிலேயே பிக்பாஸ் அழைத்தார். ஆனால் பல்வேறூ காரணங்களைச் சொல்லி எஸ்கேப் ஆனவர் இந்தாண்டு ஆடிஷன் அட்டென்ட் செய்திருப்பதாக தெரிகிறது.

ஆனாலும் வீட்டில் பெற்றோர் அனுமதி உள்ளிட்ட சில விஷயங்கள்தான் கடைசியில் நிகழ்ச்சிக்குள் போகிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் என்கிறார்கள்.

தேவயாணி வீட்டு ராஜகுமாரி!

நடிகை தேவயாணியின் மகள் இனியா ராஜகுமாரன் பெயரும் இந்த பட்டியலில் அடிபடுகிறது. பிரபல நடிகையின் மகள் என்கிற எந்த முன்னுரிமையையும் விரும்பாமல் ஜீ தமிழ் சேனலின் இசை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போதே 'அட' என வியக்க வைத்தவர். எனவே விஜய் டிவியின் பார்வையும் இவர் பக்கம் திரும்பியிருப்பதாகச் சொல்கிறார்கள். பிக்பாஸ் வீட்டுக்குச் சென்றால் அங்கும் 'பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா' எனப் பாடுவார் என எதிர்பார்க்கலாம்.

இவர்கள் தவிர முன்னாள் போட்டியாளரின் பாய் ஃப்ரண்ட் என அறியப்படும் பார்கவ், மற்றும் ஹாட் பீட் சீரிஸில் நடித்த ஒருவர் பெயரும்ம் இந்தப் பட்டியலில் அடிபடுகிறது.!

"15 வயசுல கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க; அதனால பல விஷயங்களை மிஸ் பண்ணேன்" - கம்பம் மீனா

சீரியலில் இப்போது நகைச்சுவை கேரக்டர் என்றால், இயக்குநர்கள் பார்வையில் சட்டெனப் படுபவராக இருக்கிறார் கம்பம் மீனா.எனவே ஹிட் சீரியல்கள் பலவற்றிலும் இவருக்கு ஒரு கேரக்டர் ரெடி ஆகி விடுகிறது.விஜய் டிவியில்... மேலும் பார்க்க

குஷ்புவின் ஃபேவரைட் ஷோ கம்பேக்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை விட்ட நடிகர்! - Serial updates

ஜாக்கெட்.. ஜாக்பாட்! - குஷ்பு கம்பேக்ஜெயா டிவியில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய 'ஜாக்பாட்' நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா? 'நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைனைப் பார்ப்பதற்காகவே பொது அறிவு த... மேலும் பார்க்க

Bigg Boss The Common Man: '22 எபிசோடுகள், ஒரேயொரு போட்டியாளர்' - எதற்காகத் தெரியுமா?

விஜய் டிவியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு. எனவே இந்த வருடம் ஸ்பெஷலாக எதாவது செய்யலாமென்றே 'பிக்பாஸ் தி காமன் மேன்' அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்... மேலும் பார்க்க

Shakila: 'பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன்' - கழுத்தில் அறுவை சிகிச்சை ஏன்? ஷகீலா விளக்கம்

நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்த நிலையில் அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த... மேலும் பார்க்க

`கயல் சீரியலில் இனி சஞ்சீவ் வரமாட்டாரா?' - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?

கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் வெளியேறி விட்டதாகத் தெரிய வருகிறது. கதைப்படி சீரியலில் அவர் கோமா நிலையிலிருப்பதாகக் காட்டப்பட்டாலும், இனி அவர் சீரியலில் தொடர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள் சீரிய... மேலும் பார்க்க

Bigg Boss: "எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை..." - பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி பற்றி ஓவியா

பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள். இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்... மேலும் பார்க்க