செய்திகள் :

Bigg Boss Tamil 9: அரங்கேறிய இரண்டு ட்விஸ்டுகள்; மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்?

post image

விஜய் டிவியில் வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் 9 பாதி நாட்களைக் கடந்து விட்டது.

இதில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் முதல் வாரத்திலேயே வெளியேறினார்.

பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். கடந்த வாரம் கெமி வெளியேறினார்.

 Bigg Boss Tamil 9
Bigg Boss Tamil 9

முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்தது. எனவே அடுத்த சில தினங்களில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் அமித் பார்கவ், சாண்ட்ரா, பிரஜின், திவ்யா கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

இந்தச் சூழலில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட் இன்று காலை தொடங்கியது.

வழக்கமான விசாரிப்புகளை மேற்கொண்டார் விஜய் சேதுபதி. பிறகு எவிக்ஷனுக்கான நேரம்.

சாண்ட்ரா, ரம்யா, கனி உள்ளிட்ட பலர் நாமினேஷன் பட்டியலிலிருந்த நிலையில் முதலில் டபுள் எவிக்ஷன் இருக்குமெனச் சொல்லப்பட்டது.

அரோரா, ஆதிரை
அரோரா, ஆதிரை

சாண்ட்ரா, ரம்யா, வியானா மூவரில் இருவர் வெளியேறலாம் எனவும் தகவல்கள் கசிந்தன.

இந்த நிலையில் தற்போது ஒரு ட்விஸ்ட்டை அரங்கேற்றியிருக்கிறாராம். பிக்பாஸ்.

அதாவது இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக நோ எவிக்‌ஷன் என பிக்பாஸ் அறிவித்திருப்பதாகவும், கூடவே அடுத்த அதிரடியாக ஆரம்பத்தில் வெளியேறிய ஆதிரையை மீண்டும் அந்த வீட்டுக்குள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

AVM Saravanan: ``ஷூட்டிங் ஸ்பாட்டுல ஆர்ட்டிஸ்ட்டுகளை பாராட்ட மாட்டார் ஏன்னா..." - நடிகை ராணி

சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களையும் தயாரித்திருக்கிறது ஏவிஎம் நிறுவ்னம். 'சொர்க்கம்', 'ஆசை' உள்ளிட்ட ஏவிஎம் தயாரித்த பல தொடர்களில் நடித்த நடிகை ராணியிடம் பேசினோம்.''டிவி நடிகர் நடிகைகளுக்கு வேலை தரணு... மேலும் பார்க்க

BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன்

சினிமா கேரக்டர்களைத் தந்து ‘இதையாவது ஒழுங்கா பண்ணுங்க’ என்றால் அதிலும் ஒரே சண்டை போட்டு நாறடிக்கிறார்கள்.அரோரா கூட இருக்கும் வரைக்கும் கொஞ்சம் திருந்தி வாழ்ந்த கம்ருதீன், பாருவுடன் முழுதாக இணைந்த பிறக... மேலும் பார்க்க

BB Tamil 9: ``நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு'' - FJ பார்வதி மோதல்; கலவரமான பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

Vikatan Digital Award: ``அப்பா கமல் ரசிகர்; அவரோட திருமணத்திற்கு கூட'' - தமிழ் டெக் தமிழ்ச்செல்வன்

சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் வகையில் 'விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025'கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் டெக் சேனலுக்கான விருதை தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார். தமிழ்ச்செல்வன்... மேலும் பார்க்க