``விவசாயி வேடமிட்டு, விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள்!’’ - விமர்சி...
"BJPவுடன் இருந்தபோதுதான் எந்தக் கல்லூரியில் ராமர் Engineering படித்தார் எனக் கலைஞர் கேட்டார்"-திருமா
"பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலைப் பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை பா.ஜ.க-விற்கு விதித்துதான் கலைஞர் கூட்டணி வைத்தார். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்தக் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் எனக் கேட்டார் கலைஞர்" என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,
"எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்குச் சிதறிக் கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகாத நிலையில் தி.மு.க கூட்டணியை வீழ்த்துவோம் என அன்புமணி ராமதாஸ் கூறுவது நகைப்புக்குரியது.
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலைப் பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை பா.ஜ.க-விற்கு விதித்துதான் கலைஞர் கூட்டணி வைத்தார்.

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்தபோதுதான் ராமர் எந்தக் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் எனக் கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால், தற்போது அ.தி.மு.க-வினர் பா.ஜ.க-வின் கருத்தியல் அடிமையாகிவிட்டார்கள்" என்றார்.













