செய்திகள் :

ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம்

post image

சாப்பாட்டில் எவ்வளவு உப்பு போட வேண்டும்... என்ன படிக்கலாம்... எங்கே டிரிப் போகலாம்... இந்த டிரெஸ்ஸிற்கு என்ன மேட்சாக போடலாம்... - இப்படி சின்ன, பெரிய சந்தேகங்கள் அனைத்திற்கும், இப்போது 'ChatGPT' தான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது.

இது இன்னும் ஒருபடி மேலே போய், நம் மக்கள் முதலீட்டு ஆலோசனைகளுக்கும் சாட் ஜிபிடியை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

அது சரியா... தவறா என்பதை காரணத்துடன் விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் நாகராஜன்.
பங்குச்சந்தை நிபுணர் நாகராஜன்
பங்குச்சந்தை நிபுணர் நாகராஜன்

"ஒரு நபர் ChatGPT-யிடம், 'இந்தப் பங்கில் முதலீடு செய்யலாமா?' எனக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அது அதற்கு, 'இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம்... ஆனால், நான் அதை பரிந்துரைக்கமாட்டேன். அந்தப் பங்கில் முதலீடு செய்யாமல் இருந்தாலும் நல்லது' என்பது போல நழுவலாக தான் பதில் சொல்லும்.

ஆனால், நம் மக்கள் இதை புரிந்துகொள்ளாமல் சாட் ஜிபிடி சொன்ன பங்கில் முதலீடு செய்வார்கள்.

உண்மையில், பங்குச்சந்தை தரவுகளை சாட் ஜிபிடி மாதிரியான ஏ.ஐ டூல்களில் ஆராய... பகுப்பாய்வு செய்யவே தனியாக படிக்க வேண்டும்.

அடுத்ததாக, ஏ.ஐயிடம் நமக்கு இருக்கும் சந்தேகத்தை எந்தக் கேள்வியாக கேட்க வேண்டும் என்கிற புரிதல் இருக்க வேண்டும்.

அது இருந்தால் தான், சாட் ஜிபிடியிடம் ஆலோசனை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். ஆனால், அதிலும் மிகுந்த கவனம் வேண்டும்".

முழுமையான தகவல் கீழே உள்ள வீடியோவில்...

சத்தியமங்கலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனைவரும் கலந்துகொள்ளலாமே!

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றாலே உற்சாகமாகிவிடுவார்கள். முதலீடு பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் உற்சாகமாகக் கிளம்பி விழி... மேலும் பார்க்க

பிள்ளைகளை நம்பி எதுக்கு வாழணும்? மதுரைக்காரர்கள் பயன்படுத்தும் '2-வது வருமான' ரகசியம்

"எனக்கென்னப்பா... பையன் இருக்கான், பார்த்துப்பான்!"மதுரை, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி பக்கம் பேசினாலே, 50 வயதைக் கடந்த பல பெரியவங்க சொல்ற பதில் இதுதான். பாசம் தப்பில்லைங்க. ஆனா, நிதர்சனம் வேற!இன்னை... மேலும் பார்க்க

பங்குச் சந்தை இனி ஏறுமா அல்லது இறங்குமா?- ஷேர் மார்க்கெட் எக்ஸ்பர்ட் வ.நாகப்பன் பேசுகிறார்!

ஓராண்டுக்கு முன்பு இறங்கத் தொடங்கிய பங்குச் ச்ந்தை கடந்த ஏப்ரல் மாதம் வரை இறக்கத்திலேயே பயணமானது. பிற்பாடு மெல்ல மெல்ல உயரத் தொடங்கிய சந்தை தற்போது பழைய நிலையை எட்டியதுடன், அதற்கு மேலும் உயரத் தொடங்கி... மேலும் பார்க்க

வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களே, உங்கள் ஓய்வுக் கால செலவை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

முதலீடு என்று வரும்போது வெளிநாடுகளில் வசிப்பவர்களின் முதன்மையான தேர்வு, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் இருக்கிறது. இன்னும் சிலருக்கு யூலிப் பாலிசித் திட்டங்கள்தான் அவர்களின் ஓய்வுக் காலத்துக்கு மிகவும் ... மேலும் பார்க்க

Personal Finance: 'செல்வம் சேர்க்கும் ஃபார்முலா' - சோம வள்ளியப்பன் உரை; இலவச நிகழ்ச்சி; முழு விவரம்

சொத்து ஒதுக்கீடு: நல்ல முதலீட்டு உத்தி..!முதலீட்டுத் தொகையைப் பல்வேறு சொத்து பிரிவுகளில் பிரித்து மேற்கொள்ளும், சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்பது ஒரு நல்ல முதலீட்டு உத்தியாகும்,நிறுவனப் பங்கு... மேலும் பார்க்க

ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது?

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் பங்குச்சந்தையும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த நேரத்தில் எதில் முதலீடு செய்வது நல்லது என்கிற கேள்வியும், சந்தேகமும் எழலாம். அந்தக் கேள்விக்கா... மேலும் பார்க்க